செராஸ் முதல்தரமான நிலம் ‘அம்னோ குரோனிக்கு’ விற்கப்பட்டது என்பதை அரசாங்கம் மறுக்கிறது

 

ஒரு 13 ஹெக்டேக்கர் துண்டு நிலம் ஓர் “அம்னோ நெருங்கிய நண்பருக்கு” விற்கப்பட்டது என்று குற்றச்சாட்டை கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் லோக பாலமோகன் ஜகநாதன் மறுத்துள்ளார்.

அந்தத் துண்டு நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் சந்தை மதிப்பிற்கு குறைவான விலைக்கு விற்றதின் காரணம் என்ன என்று டான் கோக் வை (டிஎபி-செராஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பியிருந்த கேள்விக்கு லோகா பதிலளித்தார்.

இந்த விற்பனையின் காரணமாக டிபிகேஎல்லின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் இலாகா 2 1/2 ஜாலான் செராஸிருந்து தாமான் தாசிக் புடு உலுவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று டான் சுட்டிக் காட்டினார்.

அந்த இலாகா பலவந்தமாக வெளியேற்றப்பட்டது ஏனென்றால் அந்த நிலம் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் ஒப்புதலுடன் ஓர் அம்னோ குரோனி நிறுவனம் ‘xxx’ விற்கப்பட்டது.

அந்த நிலம் சந்தை விலைக்குக் குறைவாக விற்கப்பட்டது மற்றும் அந்த நிலத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தின் நிர்மாணிப்புச் செலவை, அது ரிம35 மில்லியனை நெருங்கும், ஏன் டிபிகேஎல் ஏற்றுக்கொண்டது என்று நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி-பதில் நேரத்தின் போது டான் கோக் வை கேட்டார்.

அந்த நிலத்தில் கட்டப்படும் கட்டடம் கட்டி முடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமத்திற்கு டிபிகேஎல் அந்த “அம்னோ குரோனி” நிறுவனத்திற்கு இழப்பீடு வழங்குமா என்றும் டான் வினவினார்.

டான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிராகரித்த லோகபாலா, அந்த நிலத்தை சந்தை விலையைவிட 20 விழுக்காடு அதிகமான விலைக்கு விற்றதால் டிபிகேஎல் பலன்டைந்துள்ளது என்றார்.

“அம்னோ குரோனி” நிறுவனத்தைப் பற்றி கூறுகையில், “எனக்கு எதுவும் (அதைப் பற்றி) தெரியாது. அது (தகவல்) எங்கிருந்து உங்களுக்குக் கிடைத்தது என்பது எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது. அது போன்ற (அம்னோ குரோனி) பட்டியல் இல்லை, என்னிடம் இல்லை, டிபிகேஎல்லிடம்கூட இல்லை”, என்று லோகா கூறினார்.

ஆனால், அந்தப் புதிய சுகாதார இலாகா கட்டடத்தைக் கட்டுவதற்கு டிபிகேஎல் ரிம35 மில்லியன் கொடுத்ததை துணை அமைச்சர் லோகபாலா உறுதிப்படுத்தினார்.

கட்டடம் கட்டி முடிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை தாங்கள் தொடக்கத்தில் கண்டுகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டுமான பணி நடக்கையில் அதை தாங்கள் உணர்ந்ததாக துணை அமைச்சர் கூறினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் பத்து பகாட்டில் ஒரு துணி விற்கும் நிறுவனமாக தொடங்கியது. இப்போது அந்நிறுவனம் சில துண்டு நிலங்களை கோலாலம்பூரில் வாங்கியுள்ளது என்று தொடர்பு கொண்டபோது டான் கூறினார்.

எதற்காக இந்த நிலம் அந்நிறுவனத்திற்கு தேவைப்படுகிறது என்பது தமக்குத் தெரியாது என்று கூறிய டான், அது இப்போது இன்னொரு நிலத்தை செராஸில் வாங்கியிருக்கிறது, ஆனால் இன்னும் மேம்படுத்தப்படவில்லை என்றாரவர்.

சந்தை விலையைவிட 20 விழுக்காடு அதிக விலைக்கு அந்த நிலம் விற்கப்பட்டதாக துணை அமைச்சர் கூறியது, உண்மையல்ல.

டிபிகேஎல் அந்த நிலத்தை மதிப்பீடு மற்றும் சொத்துச் சேவைகள் இலாகா (JPPH) செய்திருந்த மதிப்பீட்டின்படி விற்றது. மதிப்பீடு செய்ததில் அந்த இலாகா மிதமான முறையில் நடந்துகொண்டுள்ளது. “நான் சொல்லவருவது அந்த நிலத்தை திறந்த டெண்டர் வழி இன்னும் அதிகமான விலைக்கு விற்றிருக்கலாம்”, என்று டான் மலேசியாகினியிடம் கூறினார்.

டான் அளித்தத் தகவலின்படி, அந்த நிலம் 2013 ஆண்டில் ரிம380 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

“அது பெரிய இலாபகரமான விற்பனை என்று நினைக்காதீர். அந்த நிலம் சன்வே வெலோசிட்டி மாலுக்கு அருகில் இருக்கிறது. அது முதல்தரமான நிலம்”, என்று கூறிய டான், புக்கிட் பிந்தானுக்கு அருகிலுள்ள நிலம் ஒரு சதுர அடி ரிம7,000 க்கு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்கப்படது என்று அவர் மேலும் கூறினார்.