பட்ஜெட் 2018 இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது

 

பட்ஜெட் 2018 இன் இரண்டாவது வாசிப்பு 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 107 உறுப்பினர்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 59 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்; 11 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இரண்டாவது வாசிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அது குழு அளவிலான விவாதத்திற்கு செல்கிறது..

வாக்களிப்பைத் தவிர்த்துவிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஸ் உறுப்பினர்கள் என்று மாபுஸ் ஒமார் (பாஸ் – பொகோக் செனா) தொடர்பு கொண்ட போது கூறினார்.

இரண்டாவது வாசிப்பின் போது மொத்தம் 12 பாஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தனர் தாம் எதிர்த்து வாக்களித்ததாகவும் மற்றவர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்து விட்டனர் என்று மாபுஸ் கூறினார்.

மாபுஸ் அளித்த தகவலின்படி, அப்துல் ஹாடி அவாங் (பாஸ் – மாராங்) மற்றும் வான் ஹசான் முகமட் ரம்லி (பாஸ் – டுங்குன்) ஆகியோர் அங்கு இல்லை.

மொத்தம் ரிம280.25 பில்லியனுக்கான பட்ஜெட் 2018 ஐ பிரதமர் நஜிப் அக்டோபர் 27 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.