பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிக்கிறது

 

 

இன்று நள்ளிரவிலிருந்து ரோன்95 விலை ஒரு லீட்டருக்கு 7 சென் உயர்ந்து ரிம2.38 க்கு விற்கப்படும்.

ரோன்97 விலை ஒரு லீட்டருக்கு 6 சென் உயர்கிறது. ஒரு லீட்டரின் விலை ரிம2.66.

டீசல் விலை 5 சென் உயர்கிறது. ஒரு லீட்டர் விலை ரிம2.20.

கடந்த ஐந்து வாரங்களாக எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.