தனக்காக தனி நாடு உருவாக்கி ராஜாவாக பிரகடனப்படுத்திய தில் இந்தியர்.. தேசிய கொடியும் அறிமுகம்

டெல்லி: இந்தியாவை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் தன்னை மனிதர்கள் இல்லாத பகுதி ஒன்றின் ராஜாவாக அறிவித்துக் கொண்டார். மேலும் அவர் ராஜாவாக இருக்க போகும் அந்த நாட்டிற்கு என்று கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

இந்த இடம் சூடானுக்கும், எகிப்துக்கும் இடையில் இருக்கும் நிலம் ஆகும். இந்த பகுதியை இதுவரை எந்த நாடும் உரிமை கொண்டாடியது இல்லை. இவர் இந்த நாட்டுக்கு தன்னை ராஜாவாக அறிவித்தது மட்டும் இல்லாமல் நிறைய எதிர்கால திட்டங்களும் வைத்து இருக்கிறார். தன்னுடைய கனவுகள் குறித்து இவர் விரிவாக பேசியிருக்கிறார்.

மனிதர்கள் வசிக்காத

பிர் தாவில் எகிப்துக்கும், சூடானுக்கும் இடையில் ‘பிர் தாவில்’ என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதி உலகின் எந்த நாடுகளின் வரைபடத்தில் இடம்பெறவில்லை. மேலும் இந்த பகுதிக்கு இதுவரை எந்த நாடும் உரிமை கோரியதும் இல்லை. மேலும் உலகிலேயே இந்த பகுதி மட்டுமே மனிதர்கள் வாழ தகுதி படைத்த, யாராலும் உரிமை கோரப்படாத நாடாக இருந்து

தலைவர் ஆனா சுயாஷ்

தீட்சித் தற்போது இந்த ‘பிர் தாவில்’ பகுதியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுயாஷ் தீட்சித் என்ற நபர் சொந்தம் கொண்டாடி இருக்கிறார். மேலும் தன்னை அந்த நாட்டின் ராஜாவாக அறிவித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் அந்த நாட்டிற்கு என்று புதிய கொடி ஒன்றையும் வடிவமைத்து இருக்கிறார். தற்போது அந்த நாட்டில் தனக்கு என்று கொஞ்சம் நிலத்தை ஒதுக்கி உள்ளார்.

சுயாஷ் தீட்சித் கொடி நட்ட கதை

சூடானுக்கு அருகில் இருக்கும் இந்த பகுதிக்கு செல்வது மிகவும் கடினம் ஆகும். சூடானின் ராணுவமும், அங்கு இருக்கும் தீவிரவாதிகளும் எப்போது வேண்டுமானாலும் கண்டதும் சுட வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் சுயாஷ் தீட்சித் மிகவும் கஷ்டப்பட்டு சூடான் ராணுவத்திடம் அனுமதி வாங்கி அங்கு சென்று இருக்கிறார். மேலும் அங்கு சென்று தன்னுடைய நாட்டின் கொடியை அங்கு நட்டு இருக்கிறார். அதேபோல் அங்கு விதை ஒன்றை போட்டு தண்ணீர் விட்டு இருக்கிறார்.

நாமும் குடிமகனாகலாம்

இந்த புதிய நாட்டிற்கு அவர் ‘தி கிங்கிடம் ஆப் சுயாஷ் தீட்சித்’ என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நாட்டிற்கு நமக்கும் குடிமகனாக செல்லலாம். அவரிடம் அனுமதி பெற்று குடிமகனுக்கான உரிமையை பெற வேண்டுமாம். மேலும் அங்கு நிலம் வாங்கவும் இப்போதே விண்ணப்பிக்கும் படி அவர் கூறியிருக்கிறார். அங்கு நிலம் வாங்கியவர்கள் உடனடியாக அங்கு செடி நட்டு தண்ணீர் விட வேண்டும் என்பது அவர் வைத்திருக்கும் சட்டம்.

ஐநாவிடம் கோரிக்கை

கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் அந்த வேலையை விட்டுவிட்டு சுயமாக ‘சாப்டினேட்டர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். உலகம் சுற்றும் வாலிபனான இவர் தான் தனது நாட்டிற்கு அங்கீகாரம் பெற முடிவு செய்து இருக்கிறார். இதற்காக ஐநா சபைக்கு மெயில் அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: