அமைச்சர்: டுரியான் ஆண்களுக்கு நல்லது

 

டுரியானில் பாலுணர்வுக்கு வலுவூட்டும் சத்துகள் இருப்பதால், அவை குறித்து மிக அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் விவசாயத் தொழில் சார்ந்த அமைச்சர் அஹமட் ஷாபிரி சீக் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பழத்தினால் ஆண்களுக்குக் கிடைக்கூடிய பயன்கள் பற்றி தமது நண்பர் ஒருவர் கூறிக்கொண்டதை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“டுரியானில் பாலுணர்வுப் பொருள்கள் இருக்கின்றன என்று எனது நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார்.

“அது ஆண்களுக்கு நல்லது. அதுதான் அவர் சொன்னது”, என்று அமைச்சரின் கேள்வி-பதில் நேரத்தில் அமைச்சர் கூறினார்.

“இது குறித்து மேலும் ஆய்வு செய்யுமறு சம்பந்தப்பட்ட அமைப்பை நாங்கள் கேட்டுக்கொள்வோம்”, என்றாரவர்.

பாலுணர்வு சத்துகள் தவிர, டுரியானில் இதர சத்துகளும் இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.