யோகா சவூதி அரேபியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

 

 

-எம். கிருஷ்ணமூர்த்தி, நவம்பர் 17, 2017.

நவம்பர் 2008 இல், மலேசிய தேசிய பாட்வா மன்றம் யோகாவுக்கு தடைவிதித்தது.

மலேசியாவின் உயர்நிலை இஸ்லாமிய அமைப்பான, பாட்வா மன்றம், இஸ்லாமியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது, ஏனென்றால் யோகாவில் இந்து சமயம் சார்ந்த கூறுகள் இருப்பதாகவும் அது முஸ்லிம்களை வழிதவறச் செய்யும் என்றும் கூறியது..

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை, சவூதி அரேபியா யோகா பயிற்சியை ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இச்செய்தியை இந்தியா டுடே என்ற இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வெளியாகும் ஆங்கிலச் செய்தி இதழ் வெளியிட்டது.

ஆக, சவூதி அரேபியாவில் யோகா பயிற்சி பெற அல்லது போதிக்க விரும்புகிறவர் அதற்கான அனுமதிக்கு மனு செய்து அப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

சவூதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு யோகாவை “விளையாட்டு நடவடிக்கள்” என்ற தலைப்பில் பட்டியலிட்டுள்ளது. இது அரசாங்கத்திடமிருந்து லைசென்ஸ் பெற்ற பின்னர் சவூதி அரேபிய குடிமக்கள் யோகாவை பயிலவும் பயிற்றுவிக்கவும் அனுமதிக்கிறது.

அந்த இஸ்லாமிய நாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யோவைப் போதிக்கும் நோவுப் மார்வாவை இதை அதிகாரப்பூர்வமாக்குவதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

எனது வியாதி எனக்கு யோகவின் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது என்று 37 வயதான
நோவுப் கூறினார். அந்த அரேபிய நாட்டில் யோகாவுக்கான போராட்டத்தில் அவர் முன்னிலையில் இருந்தார். இறுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

2005 ஆம் ஆண்டில், அவர் அதிகாரிகளை அணுகத் தொடங்கினார். பலன் ஏதும் இல்லை. இறுதியில், அவர் அரச மன்ற உறுப்பினரான ஓர் இளவரசியை அணுகினார். இந்த இளவரசி சவூதி அரேபியாவில் பெண்களுக்கு கூடைப்பந்து விளையாட்டை ஆரம்பித்தவர்.

நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. விரைவில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க அவர்கள் அனுமதி அளிப்பார்கள் என்று அந்த இளவரசி நோவுப்க்கு உறுதி அளித்தார்.

2008 ஆம் ஆண்டில், மலேசியா முஸ்லிம்களுக்கு யோகாவை தடைசெய்தபோது, பாட்வா மன்றத்தின் அப்போதையத் தலைவர் அப்துல் ஷுகோர் ஹுசின், யோகாவின் இறுதி நோக்கம் வேறொரு சமயத்தின் கடவுளோடு ஒன்றாகி விடுவதாகும் என்பதை ஏராளமான முஸ்லிம்கள் புரிந்துகொள்ளத் தவறி விட்டனர் என்று கூறினார் – இந்த விளக்கத்தை பல யோகா பயிற்சி நடத்துபவர்கள் நிராகரித்துள்ளதோடு யோகாவுக்கு சமய அடிப்படைக்கூறு தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

“இந்து சமயத்திலிருந்து தோன்றிய யோகா, மன அமைதி மற்றும் இறுதியில் ஆண்டவனுடன் ஐக்கியப்படுதல் என்ற அதன் குறிக்கோளை அடைவதற்கு உடற்பயிற்சி, சமய அடிப்படைக்கூறுகள், பாடுதல் மற்றும் இறைவழிபாடு செய்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ளது என்பது எங்களது கருத்து”, என்று அப்துல் ஷுகோர் கூறினார்.

ஆண்களைப் போல நடந்து கொள்ளும் பெண்கள் மற்றும் ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்கள் ஆகியோருக்கும் அம்மன்றம் தடை விதித்தது.

இப்போது, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“பொது விளையாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராக இளவரசி ரீமா பின்ட் பண்டார் அல்சாவுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளின் அனைத்து தலைவர்களும் தம்மை நேரடியாக அணுவைதை அவர் வரவேற்றார். இந்த ஆண்டில் பெண்கள் விளையாடவும் வாகனம் ஓட்டவும் கூட அனுமதிக்கப்பட்டுள்ளனர்”, என்று நோவுப் கூறினார்.

சவூதி அரேபியாவின் தலைமைத்துவம், அரசர் சால்மான் பின் அப்துலசிஸ் மற்றும் பட்டத்திளவரசர் முகம்மட் பின் சால்மான் ஆகியோர் சவூதி அரேபியாவின் வரலாற்றை மாற்றுகின்றனர். எம்பிஎஸ் என்று அழைக்கப்படும் பட்டத்திளவரசர் புதிய தூர நோக்கம் 2030 ஐ தொடக்கி வைத்தார். அது மேம்பாடு மற்றும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தும்.

ஆரோக்கியம் மற்றும் நாட்டின் செல்வச் செழிப்பு ஆகியவை அவரின் தூரநோக்கில் உள்ளடங்கியவைகளாகும். இவ்வாண்டு செம்டெம்பர் 26 இல், சவூதி அரேபியா பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது. பெண்கள் பற்றிய சவூதி அரேபியாவின் பிற்போக்கான மனப்பான்மை பல ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

“நான் யோகா மற்றும் உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ளும் வைத்தியம் ஆகியவற்றை செய்கிறேன். எனது நோய் நிலையானதாக இருக்கிறது. எனது மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். அதனால்தான், நான் யோகா போராடக்காரராகியுள்ளேன், அதை சவூதி அரேபியாவில் ஊக்குவிக்கிறேன்”, என்றார் நோவுப்.

======================================================================================

M KRISHNAMOORTHY has been a yoga and meditation practitioner for the past 40 years. He teaches yoga voluntarily to groups, families and friends.
Read more at https://www.malaysiakini.com/news/402173#rj8AZceCdoP2Zp2O.99