பிஎன் தலைவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரியுங்கள், விக்னேஸ்வரன்

 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் எஸ். எ. விக்னேஸ்வரன் கூறுகிறார்.

தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட விக்னேஸ்வரன், நோ ஒமாரின் தலைமையின்கீழ் இருக்கும் பிஎன்னை அனைத்து மக்களும், குறிப்பாக இங்குள்ள இந்திய சமூகம், ஆதரிப்பதை தாம் காண விரும்புவதாகக் கூறினார்.

பிஎன் சிலாங்கூர் அரசாக ஆட்சிக்குத் திரும்பும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தேவான் நெகாராவின் தலைவருமான விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.