அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலிருந்து ஜூலைக்குப் பின்னர்தான், ரபிஸி கூறுகிறா

 

அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலிருந்து ஜூலை மாதங்கிடையில் நடைபெறும் என்று பிகேஆர் உதவித் தலைவர் முகமட் ரபிஸி ரமலி கூறுகிறார்.

அவரது இன்வோக் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இக்கருத்தை அவர் வெளியிட்டார். தற்போது நஜிப்புக்கு மக்கள் ஆதரவு குறைந்த அளவில் இருப்பதாக அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

ஏப்ரல்-ஜூலையில் தேர்தல் நடத்துவதற்கான காரணம் நஜிப்புக்கு தேர்தலை இப்போது நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை, ஏனென்றால் அவருக்கு மக்களின் ஆதரவு நல்லதாக இல்லை என்று கூறிய ரபிஸி, மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு அவருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் தேவைப்படும். ஆகவே, தேர்தல் ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கிடையில்தான் என்று அவர் நேற்றிரவு சுபாங்கில் கூறினார்.

முன்னதாகவே தேர்தல் நடத்துவதற்கான தனிச்சிறப்புரிமை நஜிப்புக்கு இருந்த போதிலும், அவ்வாறு செய்வது தோல்வியில் முடியும் என்று ரபிஸி மேலும் கூறினார்.