காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது – பாகிஸ்தான் சொல்கிறது

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை குழு தாக்கல் செய்த பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என கூறிஉள்ளது. காஷ்மீர் சுயஉரிமைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் கொண்டுவந்த தீர்மானம் 75 நாடுகள் உதவியுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என்ற உண்மைக்கு இதுவே சாட்சியம்,” என கூறிஉள்ளது.

“கடந்த 40 ஆண்டுகளாக இந்த தீர்மானம் ஒவ்வொரு ஆண்டு எடுக்கப்பட்டு வருகிறது, இவ்விவகாரத்தில் இந்தியா உலக நாடுகளிடம் எடுத்துரைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை மறைக்க முயற்சி செய்யும் அதன் குளறுபடியான உண்மைகளும் தோல்வியை தழுவிட்டது,” என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

-dailythanthi.com