டோக்லாமில் கடந்த 2 மாதங்களில் சீனா புதிய சாலைகளை அமைத்தது, செயற்கைக்கோள் புகைப்படம் வெளியானது

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனையடுத்து இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே பதற்றமான சூழ்நிலையானது ஆகஸ்ட் 28-ம் தேதி முடிவுக்கு வந்தது. சீனா முச்சந்திப்பில் இருந்து ராணுவத்தை திரும்ப பெறுவதாக அறிவித்ததை அடுத்து இந்திய ராணுவமும் பழைய நிலைக்கு திரும்பியது இதனால் அமைதி திரும்பியது. இப்போது கடந்த இரண்டு மாதங்களில் சீன ராணுவம் எல்லையில் புதிய சாலைகளை அமைத்து உள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகிறது என என்டிடிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

அக்டோபர் 17 மற்றும் டிசம்பர் 8-ம் தேதிகளுக்கு இடையே இந்த கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது என்பதை புகைப்படம் காட்டுவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியா – சீனா இடையே 70 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்த பின்னர் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் பல்வேறு சாலைகளின் கட்டமைப்பை சீன ராணுவம் அதிகரித்து உள்ளது, சாலையின் நீளத்தை நீட்டித்து உள்ளது என செயற்கைக்கோள் புகைப்படம் காட்டுகிறது.

புதியதாக அமைக்கப்பட்டு உள்ள சாலையானது ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு எல்லையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது, இருதரப்பு இடையே மோதல் போக்கு நீடித்த பகுதியில் இருந்து கிழக்கே 4.5 கிலோ மீட்டர் தொலைவில் கட்டமைக்கப்பட்டு உள்ளது, இந்திய ராணுவத்தின் டோகா லா நிலைக்கு அடுத்து உள்ளது. இரண்டாவது சாலையானது மோதல் போக்கு நீடித்த பகுதியில் இருந்து கிழக்கே சுமார் 7.3 கிலோ மீட்டர் தொலைவில் 1.2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வடக்குபகுதி நோக்கி நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சீன ராணுவம் எல்லையில் சாலை அமைக்கும் பணியை தொடர்கிறது என செய்திகள் வெளியாகியிருந்தது.

கடந்த 13 மாதங்கள் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்யும் போது பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் புதிய சாலை அமைக்கும் கட்டமைப்பு பணிகள் தொடங்கி உள்ளது. மோதல் போக்கை அடுத்து அக்டோபர் 17 மற்றும் டிசம்பர் 8-ம் தேதி வரையில் புதியதாக சாலைகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்பதை காட்டுகிறது.

-dailythanthi.com

TAGS: