முன்னாள் எம்பியைச் சுல்தான் பாராட்டினார், அஸ்மின் செயல்பாட்டில் அரண்மனைக்கு மகிழ்ச்சி இல்லை என்று அர்த்தம்

முன்னாள் மந்திரி பெசார், காலிட் இப்ராஹிமை, சிலாங்கூர் சுல்தான் பாராட்டியது, அஸ்மின் அலியின் தலைமையிலான தற்போதைய மாநில அரசு நிர்வாகத்தில், அரண்மனை அவ்வளவாக மகிழ்ச்சியாக இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்று பாரிசான் நேசனல் (பிஎன்) கூறியுள்ளது.

சிலாங்கூர் பிஎன் துணைத் தலைவர், மாட் நாட்ஸாரி அஹ்மட் டஹ்லான், சுல்தான் சராஃபுதீன் இட்ரிஸ் ஷாவின் அறிக்கையின் வழி , 2014-ம் ஆண்டு மந்திரி பெசார் பதவியில் இருந்து காலிட் அகற்றப்பட்டது உட்பட, பக்காத்தான் ஹராப்பான் அரசின் அரசியல் போக்கு, அரண்மனைக்குப் பிடிக்கவில்லை என்று நாம் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

“காலிட் மிகவும் நம்பகமானவர் மற்றும் தனது பதவிக்காலத்தின் போது எடுத்துகொண்ட உறுதிமொழியில் உறுதியாக இருந்தார்.

“அஸ்மின் மகாபாரதம் மற்றும் ஜான் லாக் போன்ற கொள்கைகளுடன் ஒத்துப் போகிறவர். இது  நடைமுறையில் இருக்கும் நமது அரசியலமைப்பு முடியாட்சி கொள்கையுடன் அது பொறுந்தாது,” என்று ஃப்.எம்.தி-யிடம் அவர் கூறியுள்ளார்.

சிலாங்கூர் பிஎன் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளரான அவர், சிலாங்கூர் சுல்தான் தமது அறிக்கையில், காலிடின் விசுவாசத்தைப் புகழ்ந்து கூறியதையும், 3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் அகற்றப்பட்டதால் அதிர்ச்சியடைந்ததைத் தெரிவித்துள்ளதையும்  சுட்டிக்காட்டினார்.

காலிட் அகற்றப்பட்டது, சிலாங்கூர் அரசியலில் மிகவும் சவாலான காலகட்டம் என்று சுல்தான் ஷரஃபூடின் விவரித்திருந்ததையும் மாட் நாட்ஸாரி குறிப்பிட்டார்.