அரசியல் அறிவிப்பை வெளியிடாததால் விஷம் குடித்தார் ரஜினி ரசிகர்

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று பலவருடம் சொல்லிக்கொண்ட இருக்கிறார் தவிர இன்னும் அறிவிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக தனது அரசியல் பிரவேசத்தை பற்றி பேசினார், போர் வரும் போது பார்த்துக்கொள்வோம் என்று சூசகமாக அரசியல் கட்சி தொடங்குவது பற்றி அறிவித்தார்.

இந்நிலையில் ரஜினி பிறந்த நாள் முன்னிட்டு அரசியல் கட்சி அறிவிப்பு வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் எந்த அறிவிப்பும் வெளிவராமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்காததை அடுத்து சேலம் ரசிகர்மன்ற நிர்வாகி ஏழுமலை விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.

இவருக்கு கல்யாணமாகி இரு குழந்தைகள் உள்ளனர், தற்போது வந்த தகவல் படி உடல்நலம் சற்று தேறி இருக்கிறார்.

-dailythanthi.com