‘தூய்மையற்ற’, ‘முஸ்லிமல்லாத’ டிஎபியை நிராகரிக்க வேண்டும், ஹாடி கூறுகிறார்

தமது முன்னாள் பக்கத்தான் ரக்யாட் பங்காளியான டிஎபியை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மீண்டும் தாக்கியுள்ளார். அக்கட்சி ஒரு தூய்மையான அரசை நடத்த முடியாது; அதன் தலைவர்களை அது பிரதமாராக்க ஆசைப்படக்கூடாது ஏனெனெறால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்று அவர் கூறியுள்ளார்.

“டிஎபி ஒரு தூய்மையான அரசாக இருக்க முடியாது. அவர்களின் தவறான செயல்கள் குறித்து பல புகார்கள் இருக்கின்றன”, என்றாரவர்.

14ஆவது பொதுத் தேர்தலில் எதிரணி வென்றால், டிஎபி தலைவர்கள் பிரதமராவது மலேசியாவின் உண்மைநிலைக்கு எதிராக இருக்கிறது, இங்கு இஸ்லாமிய நாடு என்றால் இஸ்லாம் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

“இது முக்கியமாகும். இஸ்லாம் மட்டுமே அனைவருக்கும் நியாயமாக இருக்கிறது”, என்று பெர்த்தா ஹரியானுடனான ஒரு நேர்காணலில் நேற்றிரவு ஹாடி கூறினார்.