எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????

இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

என் பேரு வில்லியம் இல்ல….

அப்பன் பேரு சாமுவேலும் இல்ல… ஆத்தா பேரு எலிசபெத்தும் இல்ல…

தாத்தன், அப்பன் பொறந்தது இங்கிலாந்துமில்ல…

’பசி’ வந்தபோது பசியை அடக்கியது பீசாவும், பர்கரும் இல்ல…

தாகத்துக்கு குடிச்ச தண்ணியும் தேம்ஸ் ஆறுல இருந்த வந்தது இல்ல…

படிச்சது ஆக்ஸ்போர்டுமில்ல, இப்போ இருக்குறது சிட்னியும் இல்ல…

”ஹேப்பி நியூ இயர்” சொல்ல நீயும் அயர்லாந்துமில்ல…

நீயும், உன் அப்பன், ஆத்தா எல்லாம் சார்லஸ், விக்டோரியா வம்சமுமில்ல….

பின்ன எதுக்குடா பேய்கள் நடமாடுற அர்த்த ராத்திரியில
கேக்கை வெட்டி அரிதாரம் பூசி
குடிச்சு கும்மாளம் போட்டு கூப்பாடு போடுறீங்க…

உனக்குனு அடையாளம் ஒரு கோடி இருக்க அடுத்தவன்
கலாச்சாரம் உனக்கு எதுக்குடா?

அடிமையாய் இருந்த 200 ஆண்டுகள் பத்தலையா?….

இன்றைய தலைமுறை சுதந்திர காற்றை சுவாசிக்க தங்ளது மூச்சை விட்ட உயிர்கள் எத்தனை கோடி?….

இதனால தான் கேட்குறேன்… எனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..????

—பழ. தமிழார்வன்–

TAGS: