வேள்பாரி : ஜனநாயகத்தைப் பற்றி டாக்டர் மகாதீர் பேசக்கூடாது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் ஜனநாயகம் பற்றி பேசக்கூடாது என்று, மஇகா பொருளாளர் சா.வேள்பாரி இன்று தெரிவித்தார்.

மகாதீரின் 22 ஆண்டுகால ஆட்சியில், மக்கள் ‘டெமோகரசி’ க்கு (ஜனநாயகம்) எதிரான ஒரு ‘டெமோகிரேசி’ யைப் (பைத்தியக்காரத்தனம்) பார்த்துவிட்டனர் என்றார் அவர்.

“அவருடையக் காலத்தில், நாம் ஜனநாயகத்தை அனுபவித்ததில்லை, ஒரு சர்வாதிகாரியின் தலைமையில், பெரும்பான்மையான மலேசியர்கள் ஜனநாயகக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டார்கள். மக்கள் நலனைக் கருதாமல், தான் விரும்பியதை எல்லாம் அவர் செய்து வந்தார்.

“தற்போது, எதிர்க்கட்சியினர் மகாதீரை தங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதைப் பார்த்தால்,  ஜனநாயகம், நீதித்துறை மற்றும் முடியாட்சி முறைகளை அழித்த அந்தச் சர்வாதிகாரியின் தலைமையில் மீண்டும் மலேசியா இருண்ட காலத்திற்கே சென்றுவிடும்போல் உள்ளது,” என்று வேள்பாரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.