ஹரபான் பிஎம் வேட்பாளாரை அதன் இன்றைய மாநாடு அறிவிக்கும்

பக்கத்தான்  ஹரபான் மாநாட்டின்  இரண்டாவது   நாளான இன்று   அதன்  பிரதமர்   வேட்பாளர்  உள்பட    அதன்  முக்கிய   திட்டங்களும்    அறிவிக்கப்படும்.

ஷா  ஆலமில்   நடைபெறும்  அதன்   மாநாட்டுக்கு   ஆயிரம்   பேராளர்கள்   திரண்டு   வந்திருந்தனர்.

ஹரபான்   அவைத்  தலைவர்   டாக்டர்  மகாதிர்   முகம்மட்டும்    தலைவர்    டாக்டர்   வான்  அசிசா  இஸ்மாயிலும்  டிஏபி  தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்  எங்,  அமனா   தலைவர்    முகம்மட்    சாபு   ஆகியோருடன்   மாநாட்டு   மண்டபத்துக்கு    வருகை   புரிந்தபோது   முரசங்களும்    மற்ற  வாத்திய   கருவிகளும்    ஒலித்தன.

“ரிபோர்மாசி”   முழக்கம்   மாநாட்டு  மண்டபத்தை    அதிர  வைத்தது.  அதையும்  மிஞ்சி   “ஹிடுப்   துன் (துன்  வாழ்க)  முழக்கமும்  எழுந்தது.

தலைமைச்   செயலாளர்  சைபுசின்  அப்துல்லா,    ஹரபான்   சர்ச்சைமிக்க  சூழலில்   ஒரு  சிறப்பான  முடிவுக்கு  வந்திருப்பதாகக்  கூறினார்.

பிஎன்னில்   அம்னோ  “ஆபாங்  லோங்(பெரிய  அண்ணன்)”  என்ற  நிலையிலிருந்து   “ஆ  லோங்(கடன்  முதலை)-ஆக மாறியிருப்பது   போன்றல்லாது   ஹரபானில்   நான்கு   கட்சிகளும்   சமதகுதி  கொண்ட  கட்சிகளாகும்  என்றார்.

அதன்பின்னர்  ‘மக்கள்  மேடை’   என்ற  அங்கத்தில்  இளைஞர்,  மகளிர்  பிரிவுகளும்     மற்ற  தரப்பினரும்   அவர்களின்   கருத்துகளை   எடுத்துரைத்தனர்.

ஹரபான்   இன்று   அதன்  கொள்கைகளை    அறிவிக்கும்.

மாலையில்   அதன்   தலைவர்கள்   உரையாற்றுவார்கள்.  அன்வார்  இப்ராகிமின்  உரை   வாசிக்கப்படும்.