வெறுப்பு அரசியலால் தீமையே- நஜிப்

எதிரணியினர்   பின்பற்றும்   வெறுப்பு   அரசியல்   நாட்டுக்கு   நல்லதல்ல  என்கிறார்  பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்.

நாட்டுக்குத்   தேவை   ஆரோக்கிய  அரசியலைப்    பின்பற்றும்   தலைவர்களே.  அவர்கள்  மக்களின்  நலன்  பேணுவார்கள்,   நாட்டின்   நலனுக்கு  முன்னுரிமை  கொடுப்பார்கள்   என்றாரவர்.

“அரசாங்கம்   என்ற  முறையில்   நாங்கள்   நிலவைக்  கொண்டு  வருவோம்,  நட்சத்திரங்களைப்  பிடித்துத்   தருவோம்    என்றெல்லாம்    வாக்குறுதி   அளிப்பதில்லை.  ஆனால்,  மக்களுக்கு   எது  நல்லதோ   அதைச்   செய்வோம்,  ஜனவரி   முதல்   தேதி   நான்கு   டோல்   சாவடிகளில்   டோல்   கட்டணத்தை   அகற்றினோம்,  (புதிதாக  மலேசியர்களுக்கு)  அமனா  டானா  அனாக்  மலேசியா  2050 (ஆடம்50)   சேமிப்புத்  திட்டத்தைக்  கொண்டுவந்தோம்,  மீனவர்களுக்கும்  பள்ளி  மாணவர்களுக்கும்   உதவிகள்   நீட்டிக்கப்பட்டன.

“மலேசியா  முழுவதும்  பெர்லிஸ்    தொடங்கி   சாபா வரை   அம்னோவின்கீழ்  உருமாற்றம்   நடந்து  வருகிறது.   இதைத்தான்  நாங்கள்  செய்வோம்.   நாங்கள்  வெற்று  வாக்குறுதிகள்  வழங்க  மாட்டோம்,   வெறுப்பு   அரசியலில்   ஈடுபட   மாட்டோம்.  நாட்டைப்  பற்றிக்  குறைகூற  மாட்டோம்,  கெட்டதாகப்   பேச   மாட்டோம்”,  என்றார்.  நஜிப்  இன்று    பெக்கான்   நாடாளுமன்றத்   தொகுதியில்  பள்ளி   மாணவர்களுக்குப்   பள்ளிக்குத்    தேவையான    பொருள்களை   வழங்கும்   நிகழ்வில்   கலந்துகொண்டா