மசீச : கொள்கை இல்லாத எதிர்க்கட்சியினர்

நேற்று, மகாதீரைப் பிரதமர் வேட்பாளராக பக்காத்தான் ஹராப்பான் அறிவித்ததானது, எதிர்க்கட்சிக்கு எந்தவிதமான கொள்கையும் கிடையாது என்பதைக் காட்டுகிறது என்று, மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) துணைத் தலைவர், வீ கா சியோங் கூறியுள்ளார்.

டாக்டர் மகாதீர் ஆட்சி காலத்தின் போது, 1998-ல் அன்வார் இப்ராஹிம்மை பதவியிலிருந்து நீக்கியது, ஓப்ஸ் லாலாங்கில் பலரைக் கைது செய்தது, 1980-களில் ஏற்பட்ட நீதித்துறை நெருக்கடியில் துன் சாலே அபாசை தலைமை நீதிபதி பதவியிலிருந்து நீக்கியது போன்ற சில சம்பவங்களை, வீ ஹராப்பானுக்கு நினைவூட்டினார்.

“அவர்கள் இப்பிரச்சினையை மறுபரிசீலனை செய்து, தங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியும் என்றால், புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்காக மற்ற விஷயங்களிலும் அவர்கள் எளிதாக தங்கள் மனதை மாற்றிக்கொள்ள முடியும்,” என்று வீ கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானின் இம்முடிவு தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒரே நபர், டாக்டர் மகாதீர் மட்டுமே,” என்றும் அவர் கூறியுள்ளார்.