அன்வார் ஒரு கைதி, சிறைச்சாலை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்- நூர் ஜஸ்லான்

சிறையில்   உள்ள   எதிரணித்   தலைவர்  அன்வார்  இப்ராகிமையோ   அல்லது  வேறு  எந்தவொரு  கைதியையோ    சென்று  காண  விரும்புவோர்   சிறைத்துறையின்  முன்   அனுமதியைப்  பெற வேண்டும்    என்று உள்துறை  துணை  அமைச்சர்  நூர்  ஜஸ்லான்   முகம்மட்  கூறினார்.

அதனால்தான்  நேற்று செராஸ்  மறுசீரமைவு  மருத்துவமனையில்     அன்வாரைக்  காண     முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்     அனுமதிக்கப்படவில்லை  என  நூர்  ஜஸ்லான்  கூறியதாக   த   மலேசியன்  இன்சைட்   அறிவித்துள்ளது.

“ஒரு  கைதி   சுதந்திர  மனிதர்   அல்ல. அவர்(அன்வார்)  சிறைத்துறை   விதிமுறைகளுக்குக்   கட்டுப்பட்டவர்.  அவரின்  குடும்பத்தாரைத்   தவிர்த்து   வேறு  யாரும்   அவரைப்  பார்க்க   அனுமதியில்லை”,  என்றாரவர்.

குடும்பத்தார்  தவிர்த்து  கைதிகளை   அவர்களின்    வழக்குரைஞர்கள்   சந்திக்கலாம்-  அதுவும்   தகுந்த  காரணத்துடன்.

“டாக்டர்  மகாதிர்    அவரைச்   சந்திக்க   எந்தக்   காரணமுமில்லை”,  என்று  கூறிய   நூர்  ஜஸ்லான்  அன்வாரைச்   சந்திக்க   மகாதிரை   அனுமதிக்க   வேண்டாம்   என்பது   சிறைத்துறையின்   உத்தரவு   என்பதையும்   குறிப்பிட்டார்.