நஜிப் பற்றிப் பதிவிட்டிருந்த குற்றச்சாட்டிலிருந்து ஜைட் விடுதலை

ஒரு   வலைப்பதிவில்   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கால்   நாட்டுக்கு   அபாயம்    என்று   பதிவிட்டிருந்தார்  என்று  குற்றம்  சாட்டப்பட்டிருந்த  முன்னாள்   சட்ட   அமைச்சர்     ஜைட்   இப்ராகிமை   கோலாலும்பூர்  செஷன்ஸ்   நீதிமன்றம்  இன்று  விடுவித்தது.

அவரை   விடுவித்த     நீதிபதி    ஜமான்   முகம்மட் நூர்   அரசுத்தரப்புப்  போதுமான   ஆதாரங்களைக்  காண்பிக்கத்  தவறிவிட்டது   என்று   தீர்ப்பளித்தார். அது  நஜிப்பைச்   சாட்சியாக  அழைக்கத்   தவறிவிட்டது    என்றார்.

“பாதிக்கப்பட்டவரை  அழைத்து  வந்திருக்க  வேண்டும். அவர்  எப்படிப்  பாதிக்கப்பட்டார்  என்பதைத்   தெரிந்துகொள்ள.

“அரசுத்தரப்பு   போதுமான  ஆதாரங்களைக்  கொண்டு  குற்றத்தை  நிறுவத்   தவறிவிட்டது  என்பதால்  குற்றஞ்சாட்டப்பட்டவரை  விடுவிக்கிறேன்”,  என்று  ஜமான்  கூறினார்.