பெல்டா விசாரணை அறிக்கை அடுத்த வாரம் ஏஜிசி-இடம் வழங்கப்படும்

போலீசார்,   பெல்டா  நில  உரிமை  மாற்றப்பட்டது   தொடர்பிலான   விசாரண   அறிக்கையை   அடுத்த   வாரம்   சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகத்தில்  ஒப்படைப்பார்கள்   என   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   முகம்மட்  புஸி  ஹருன்   இன்று   கூறினார்.

ஆனால்,   விசாரணை   எந்த   அளவில்  உள்ளது   என்பதை  அவர்  கூறவில்லை.  அது  தொடர்கிறது   என்று  மட்டுமே  கூறினார்.

“விசாரணை   தொடர்கிறது. அடுத்த   வாரம்   அறிக்கையை  ஏஜி  அலுவலகத்திடம்  ஒப்படைக்க   முடியும்   என்று   நம்புகிறோம்”,  என்றார்.

இவ்விவகாரம்  தொடர்பில்  பலர்  விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  கடந்த  வாரம்   பெல்டாவின்  முன்னாள்   தலைவர்  இசா   சமட்டிடம்   புக்கிட்   அமான்  வணிகக்  குற்றப் புலனாய்வுத்துறை   பல  மணி  நேரம்  விசாரணை   நடத்தி   வாக்குமூலம்  பதிவு   செய்தது.