ஹராப்பான் தனது தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடும்

பக்காத்தான் ஹராப்பான், தனது சரியான கொள்கைகளைத் தொடரும், குறிப்பாக சீர்திருத்தத்திற்கான போராட்டம், நீதி, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்பு, முற்போக்கு மற்றும் எளிமை போன்றவற்றின் வெளிப்பாடாக தங்கள் தேர்தல் அறிக்கை திகழும் என்று பெர்சத்து கட்சியின், திட்டம் மற்றும் கொள்கைபிரிவுத் தலைவர் டாக்டர் ராய்ஸ் ஹுசின் முஹமட் ஆரிப்  கூறியுள்ளார்.

“ஹராப்பான் தேர்தல் அறிக்கையில், இந்தக் கொள்கைகள் கட்டமைக்கப்பட்டு, படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான, 88 பக்க தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும்.

“இந்த நம்பகத்தன்மை மிக்க தேர்தல் அறிக்கை, கவனமாக ஆய்வு செய்த பிறகு

டாக்டர் ராய்ஸ் ஹுசின் முஹமட் ஆரிப்

எழுதப்பட்டிருப்பதோடு, மலேசியாவில் உள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது.

“5 கருப்பொருள்களைக் கொண்ட அது, ஹராப்பான் நிர்வாகத்தின் முதல் 100

நாட்களுக்குள் 10 வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அதோடு, 5 ஆண்டுகால நிர்வாகத்தில் 50 வாக்குறுதிகளை நிறைவேற்றும்,” என்று ராய்ஸ் கூறினார்.

மக்களின் பிரச்சனைகளுக்கும் நாட்டின் சீர்திருத்த செயற்பாட்டிற்கும் இந்தத் தேர்தல் அறிக்கை முன்னுரிமை வழங்கியுள்ளதாக ராய்ஸ் தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலில், டிஏபி-யின் பால் ஜொகூர் மலாய் வாக்காளர்கள் கொண்டிருக்கும் அச்ச உணர்வு, எதிர்க்கட்சியினருக்குச் சிக்கலாக அமையும் எனும் ஓர் ஆய்வின் அறிக்கைக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆய்வின் முடிவுகள் ஆராய்ச்சியின் முறை சார்ந்தவை, ஓர் ஆய்வு ஒரு சிக்கலை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படலாம், ஆனால் அது பொதுவானதாக இருக்க முடியாது என்றும் ராய்ஸ் தெரிவித்தார்.

“நாம் மக்களுக்கான சரியான திட்டங்களை வடிவமைக்க வேண்டும், அம்னோ-பாரிசானின் இன, மத அரசியலில் மாட்டிக்கொள்ளாமல்.

“இது, அம்னோ-பாரிசானுக்கு எதிரான ஹராப்பான் போராட்டம் அல்ல, மாறாக அம்னோ-பாரிசானுக்கு எதிரான மக்கள் போராட்டம்,” என்றார் அவர்.

தேர்தல் நெருங்கி வரும்போது, டிஏபி-ஐ தவறாக விமர்சிப்பது அம்னோ-பாரிசானின் பிரச்சார உத்தியாகும் என்றும் அவர் கூறினார்.

“டிஏபி-யை ஒரு ‘பேய்’ போல் விமர்சிக்க அவர்கள் தங்கள் வளங்களைச் செலவிடுகிறார்கள்.

“ஆனால், நாட்டில் உண்மையான பிரச்சனை அம்னோ-பின். டிஏபி 1எம்டிபி, பெல்டா, மாரா போன்ற பிரசனைகளை உருவாக்கவில்லை.

“மக்களும் இதனை உணர்ந்துள்ளனர்,” என்றார் ராய்ஸ்.

முன்னதாக, கடந்தாண்டு மே-ஜூன் மாதங்களில், ஜொகூரில் 1,100 மலாய்க்காரர்களிடம் தொலைபேசி வாயிலாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 85% மலாய்க்காரர்கள் டிஏபி-ஐ ஆதரிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

13-வது பொதுத் தேர்தலில், ஜொகூரில் எதிர்க்கட்சியினரிடையே அதிகமான, 13 சட்டமன்ற தொகுதிகளை டிஏபி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், அம்னோவிலிருந்து பிரிந்துவந்த பெர்சத்து கட்சிக்கு ஒரேயொரு இடம்தான் இருக்கிறது.

அதே தொலைபேசி வாயிலான ஆய்வில், மலாய்க்காரர் அல்லாதவர்கள் பெர்சத்துவிற்கு ஆதரவாக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: