இந்தியா பலவீனமான நாடு அல்ல; சீனாவை எதிர்கொள்ளும் திறனுடன் இருக்கிறது: இராணுவத் தளபதி பிபின் ராவத்

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடு இல்லை. சீனாவை எதிர்கொள்ளும் திறனுடனேயே இருக்கின்றோம்.” என்று இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடமும் பேசினார்.

அதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமையான நாடாக இருக்கலாம். அதே வேளையில் இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும். சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை குறித்த பாதிப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

  • தேனீ wrote on 14 ஜனவரி, 2018, 17:05

    #சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது.#

    சீனா அடிப்பதை தற்காக்க மட்டுமே இந்தியாவால் முடியும். இந்தியா சீனாவை அடிக்க முடியாது என்பதை எதிர்மறை வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: