8 ஆவது நாள்: மலேசியாகினி தற்காப்பு நிதி மூன்றில்-இரண்டு இலக்கை எட்டிவிட்டது

 

மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதிக்கான ரிம350,000 நன்கொடை திரட்டல் தொடங்கியதிலிருந்து எட்டாவது நாளான இன்று ரிம270,000 ஐ கடந்து விட்டது. இன்னும் தேவைப்படுவது ரிம80,000 மட்டுமே.

நன்கொடை வழங்கிய ஆதரவாளர்களுக்கு மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் ஹான் மீண்டும் நன்றி கூறினார்.

மலேசியாகினியின் தலைமை நிருவாகி பிரமேஷ் சந்திரனும் நன்கொடையாளர்களுக்கு அவரது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தங்கம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்கள் பகாங், ரவுப்பிலுள்ள புக்கிட் கோமான் கிராமத்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்து குறித்து மலேசியாகினி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் மற்றும் இரண்டு வீடியோக்கள் ஆகியவற்றுக்கு எதிராக ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்கம் (ஆர்எஜிஎம்) தொடர்ந்திருந்த வழக்கை 2016 இல் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து மலேசியாகினிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருந்தது.

ஆனால், இவ்வாண்டு ஜனவரி 11 இல், மேல்முறையீட்டு நீதிமன்றம் தங்கச் சுரங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து தங்கச் சுரங்கத்திற்கு இழப்பீடாகவும் வழக்கின் செலவுத் தொகையாகவும் மொத்தம் ரிம350,000 ஐ வழங்கும்படி மலேசியாகினிக்கு உத்தரவிடப்பட்டது.

இத்தொகையைத் திரட்டுவதற்கு மலேசியாகினி அதன் ஆதரவாளர்களின் உதவியை நாடியது. ஆதரவாளர்கள் இன்று வரையில் ரிம270,000 ஐ நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

மலேசியாகினியின் தற்காப்பு நிதிக்கு நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்டவாறு நிதியை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Account name: Mkini Dotcom Sdn Bhd

Account no: 514253516714 (Maybank)

Swift Code: MBBEMYKL

Branch address: Dataran Maybank, Level 1 Tower A, Dataran Maybank, 59000 Kuala Lumpur.

Donations can also be made through credit card by calling +603 7770 0017 or via PayPal.