நிறைய பேர் எதிர்க்கட்சிக்கு வாக்களியுங்கள், அமைச்சருக்கு வேலை போகட்டும்

ஒரு மூத்த பத்திரிகையாளர், எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால்,  வேலைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கவலைபடும் பொது ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வழியை முன்வைக்கிறார்.

எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் பொது ஊழியர்கள், ‘தங்கள் வேலைகளை இழக்கக்கூடும்’ என்று ஓர் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்பில், நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸி -ன் முன்னாள் ஆசிரியர், முஸ்தாபா கமில் முகமட் ஜானோர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

“ஆக, எதிர்க்கட்சிக்கு எப்படி வாக்களிக்க முடியும்?” என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் சுலபமான ஒரு வழி உள்ளது என்று கூறியுள்ளார்.

“மிகவும் சுலபம். அனைவரும் எதிர்க்கட்சிக்கு வாக்களியுங்கள், அந்த அமைச்சருக்கு வேலை பறிபோகட்டும்,” என்று நெகிரி செம்பிலானைச் சேர்ந்த அவர் கூறியுள்ளார்.

நேற்று, அரசியலில் ஈடுபடும் ஆசிரியர்களை, அரசு பொது ஊழியர்களுக்கு விதித்திருக்கும் விதிகளை மீறவேண்டாம் எனக் கல்வி அமைச்சர் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளார் என்று பெர்னாமா செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும், அரசாங்கத்திற்கு ஆதரவாக அதிகமான கல்வியாளர்கள் இல்லை என்றும் பாடாங் தெராப் எம்பியுமான மாஹ்ட்சீர் காலிட் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தெங்கு அட்னான் அம்னோவில் சேரசொல்லி, ஆசிரியர்களை அழைத்துள்ளதையும் முஸ்தாப்பா நினைவுபடுத்தினார்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள், 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும். தனது ஆலோசனையை, அரசு ஊழியர்கள் பின்பற்றி பார்க்கலாம் என்று முஸ்தாப்பா கமில் சொன்னார்.

“நம்பிக்கை இல்லையென்றால், முயற்சித்துப் பாருங்கள்,” என்றார் அவர்.