மலேசியாகினி தற்காப்பு நிதி ரிம320 ஆயிரத்தைத் தொட்டது

நீதிமன்றம்    ரவூப்   ஆஸ்திரேலியன்   கோல்ட்  மைன்ட்(ஆர்ஏஜிஎம்)  நிறுவனத்துக்கு    மலேசியாகினி   ரிம350,000  இழப்பீடு   வழங்க  வேண்டும்  என்று  தீர்ப்பளித்ததும்   அந்த  இழப்பீட்டுத்   தொகையை    மலேசியாகினி   அதன்  வாசகர்களிடமிருந்து   நன்கொடையாக    திரட்ட   முயன்று   வருவதும்  தெரிந்ததே.

மலேசியாகினியின்    நிதிக்கு  இப்போது  ரிம320,000  திரண்டிருப்பதாக   அதன்  தலைமை    செயல்    அதிகாரி   பிரமேஷ்   சந்திரன்   கூறினார்.

“பேச்சிழந்து   நிற்கிறேன்.  மலேசியாகினியில்  உள்ள    நாங்கள்   எவ்வளவு     நன்றிக்கடன்  பட்டிருக்கிறோம்   என்பதை    வருணிக்க   வார்த்தைகள்   இல்லை.  11 நாள்களில்  ரிம320,000  திரட்டியிருக்கிறோம்.

“அள்ளிக்கொடுத்த   அனைவருக்கும்  நன்றி. நாட்டின்  மேம்பாட்டுக்குத்   தேவையான   செய்திகளையும்   கண்ணோட்டங்களையும்   தொடர்ந்து   வெளியிட்டு   வருவோம்  என்று  உறுதி   கூறுகிறோம்”,   என்றார்.

மலேசியாகினி   தலைமைச்  செய்தியாசிரியர்   ஸ்டீபன்  கானும்   நான்கொடை  வழங்கிய   அனைவருக்கும்   நன்றி    தெரிவித்துக்  கொண்டார்.

மலேசியாகினி  தற்காப்பு   நிதிக்கு    நன்கொடை  அளிக்க   விரும்புவோர்  பின்வரும்  முகவரிக்கு    அனுப்பலாம்:

Account name: Mkini Dotcom Sdn Bhd

Account no: 514253516714 (Maybank)

Swift Code: MBBEMYKL

Branch address: Dataran Maybank, Level 1 Tower A, Dataran Maybank, 59000 Kuala Lumpur.

Donations can also be made through credit card by calling +603 7770 0017 or via PayPal.