முகத்திரை அணியாத பெண்ணை அறைந்த நபர் கைது

பஸ்  நிறுத்தமொன்றில்   முகத்திரை   அணியாத  ஒரு  பெண்ணை   அறைந்ததாகக்  கூறப்படும்   30வயது   ஆடவர்  ஒருவரை    செபறாங்  பிறை   தெங்கா  போலீஸ்   கைது    செய்தது.

ஏஎஸ்பி   அஹ்மட்   ஷாஹிர்   அட்னான்    தலைமையில்  சென்ற  ஒரு போலீஸ் குழு   புக்கிட்   தெங்கா,  ஜாலான்   தாமான்   பெர்வீராவில்   இரவு  மணி   11.30க்கு   அவரைக்  கைது   செய்ததாக   ஓசிபிடி    ஏஎஸ்பி   நிக்  ரோஸ்   அஷான்  நிக்   அப்துல்  ஹமிட்  தெரிவித்தார்.

“அவரை  விசாரித்ததில்  அப்பெண்ணைப்  பிடித்துத்  தள்ளியதை   அவர்  ஒப்புக்கொண்டார்.  அப்பெண்  முகத்திரை    அணியாததைக்  கண்டு   ஆத்திரப்பட்டு  விட்டாராம்.

“அப்பெண்மணியும்    அவருக்குப்  பைத்தியம்  பிடித்திருப்பதாக  ஏசியிருக்கிறார்”,  என   நிக்  ரோஸ்  அஷான்   கூறினார்.

கைது   செய்யப்பட்டவர்   மருத்துவ  சோதனைக்காக   புக்கிட்   மெர்டாஜாம்  மருத்துவ  மனைக்குக்   கொண்டு   செல்லப்பட்டதாகவும்   நிக்  ரோஸ்  கூறினார்.

பெண்ணை  அறையும்   சம்பவத்தைப்  பதிவு   செய்த   ஒருவர்  அதை  முகநூலில்  வெளியிட   அது     சமூக   ஊடகங்களில்   வைரலானது.

அதன்பின்னர்  உள்ளூர்  ஊடகங்களும்  அனைத்துலக   ஊடகங்களும்  அதைப்  பரபரப்புச்    செய்தியாக்கிவிட்டன.