பொதுப் போக்குவரத்தைப் புறக்கணித்தேனா? புரியாமல் பேசுகிறார் நஜிப் என மகாதிர் சாடல்

தேசிய  காரான  புரோட்டோன்மீது  கொண்ட  மோகத்தால்  பொதுப்  போக்குவரத்தைப்   புறக்கணித்தார்  என்று   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்  குற்றஞ்சாட்டியிருப்பதைக்  கேட்டு    டாக்டர்   மகாதிர்   முகம்மட்   சிரித்தார்.

“இப்படிப்பட்ட   பேச்சை  அவர்  கண்ணாடியைப்   பார்த்துத்தான்   பேச   வேண்டும். வேறு  யாரும்   அதைக்  கேட்க   மாட்டார்கள்”,  என  மகாதிர்  புத்ரா  ஜெயாவில்    செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

2003-இல்  பணி  விலகியபோது  நாட்டைச்  சிறந்த  நிலையில்  வைத்துவிட்டுத்தான்  விலகியதாக  அவர்   சொன்னார்.  அப்போதெல்லாம்   புரோட்டோன்  நிதி  நிலை  நல்லாவே  இருந்தது.  அரசாங்கம்   ‘மூக்கை  நுழைக்கத்   தொடங்கியதும்’  எல்லாம்   கெட்டது   என்றார்.

நஜிப்  இன்று  கோலாலும்புரில்  ஒரு   நிகழ்வில்   பேசியபோது   ஒரு  மனிதர்  புரோட்டோன்மீது   கொண்டிருந்த  மோகத்தால்     பொதுப்  போக்குவரத்து     மேம்படுத்தப்படாமல்    புறக்கணிக்கப்பட்டது    என்று   கூறியிருந்தார்.