நஜிப்: சீனாவைவிட இங்கு ஜப்பானிய முதலீடு அதிகம், அதை யாரும் பிரச்னையாக்குவதில்லையே

மலேசியாவில்    சீனாவைவிட   ஜப்பான்   அதிகம்   நேரடி  முதலீட்டைச்  செய்துள்ளது.  அதற்காக   யாரும்   நாட்டின்  இறையாண்மை  ஜப்பானுக்கு  விற்கப்படுவதாகக்  குறை  சொல்வதில்லை  எனப்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   சுட்டிக்காட்டினார்.

“சீனாவிலிருந்தும்  ஹாங்காங்கிலிருந்தும்   ரிம63 பில்லியன்   எஃப்டிஐ   இங்கு  முதலீடு    செய்யப்பட்டுள்ள  வேளையில்   ஜப்பானிலிருந்து   கூடுதலாக,  ரிம70 பில்லியன்  முதலீடு  வந்துள்ளதைச்  சுட்டிக்காட்டிக்காட்ட    விரும்புகிறேன்.  ஆனால்,  அதற்காக  யாரும்  நமது   நாட்டை   ஜப்பானிடம்  விற்றுக்கொண்டிருக்கிறோம்  என்று   அபாய   அறிவிப்பு   எழுப்பவில்லை.

“நாம்  அவர்களை  வரவேற்கிறோம்.  அதேபோல்   ஆப்ரிக்கா,  அமெரிக்கா,  சீனா,  ஐரோப்பிய  ஒன்றியம்,  இந்தியா,   சவூதி   அராபியா   ஆகிய   நாடுகளிலிருந்தும்   உலக  முழுவதிலிமிருந்தும்   வரும்  முதலீட்டாளர்களை   வரவேற்கிறோம்”,  என  நஜிப்   இன்று   கோலாலும்பூரில்   ‘மலேசிய  முதலீடு  2018’    மாநாட்டில்  உரையாற்றியபோது  கூறினார்.

நஜிப்பின்  பேச்சு,  மிகப்  பெரிய  திட்டங்களில்  சீனா  முதலீடு    செய்ய    இடம்கொடுப்பதன்வழி   அரசாங்கம்   நாட்டை ச்  சீனாவிடம்   அடகு  வைத்துவிட்டது  என  எதிரணியினர்,   முன்னாள்  பிரதமர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்  உள்பட,  குற்றஞ்சாட்டுவதற்குப்  பதிலடிபோல்  அமைந்துள்ளதாகக்  கூறப்படுகிறது.