வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் எங்கே போனார்கள்?.. விஜயேந்திரருக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

விஜயேந்திரரின் செயலுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ”தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தாதவரை மன்னிக்கலாமா?. தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்ற விஜயேந்திரரை மன்னிக்கலாமா? ”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ” தள்ளாத வயதிலும் தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தியவர் பெரியார். கடவுள் எதிர்ப்பாளரான பெரியார் கூட கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ”மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் இப்போது குரல் கொடுப்பீர்களா?” என்றுள்ளார்.

tamil.oneindia.com

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 25 ஜனவரி, 2018, 10:25

  “தமிழராகிய நாங்கள் குரல் கொடுக்க மாட்டோம்; எங்களுக்கு தமிழை விட ‘இந்து’ தான் பெரியது. உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்” என்று தமிழ் நாட்டு தமிழரே பேசும் பொழுது தமிழ் எங்கே வாழப்போகின்றது. பாவம் இந்த தமிழறிஞர் கூட்டம், தமிழரின் நாடித்துடிப்பை அறியாது பேசித் திரிகின்றார்.

 • பெயரிலி wrote on 26 ஜனவரி, 2018, 23:55

  அய்யா பாரதியாரே…மன்னிக்கவும் சின்னையா என்கிற பாரதிராஜாவே…தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது ஒரு மடாதிபதி எழுந்து நிற்காததால் (அவர் தியானத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட போதும்) தவறுதான். ஒத்துக்கொள்கிறேன். நாம் நக்கீரன் பரம்பரை அல்லவா…நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் வாக்கில் எனக்கும் உடன்பாடு உண்டு. அவ்வகையில் மடாதி பதி தவறு இழைத்து விட்டார் என்பதையும் ஒப்புக்கொள்கிறே ஆனால் ஒரு மடாதிபதி எழுந்து நிற்காததால் தமிழுக்கு தலை குனிவு ஏற்பட்டுவிட்டதா? அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஒருவர் எழுந்தது நிற்காததால் தலை குனிந்து போகும் அளவுக்கு….தமிழ்த்தாய் தொட்டாற் சுருங்கியா என்று நான் கேட்க மாட்டேன். ஆனால் ஒரு தமிழ்ப்பற்றாளராக உங்களை பறசாற்றிக்கொள்ள முயலும் நீங்கள் இனியும் ஏன் பாரதிராஜா என்று அழைக்கப்படவேண்டும்? இனியாவது பாரதிராசா என்று பெயர் மாற்றம் அறிவியுங்கள்.

 • Dhilip 2 wrote on 27 ஜனவரி, 2018, 13:09

  கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயாரை எச்சக்கலை ராஜா திட்டியதில் எந்த தவறும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது ! காரணம் கவிப்பேரரசு வைரமுத்து , மற்றவரின் வீட்டு பெண்களை அப்படி (தேவதாசி) குறிப்பிடுகையில் கவலையோ அச்சமோ கொள்ளவில்லையே ! மேலும் கவிப்பேரரசு காட்டும் குறியீடு (REFERENCE) தவறு! உண்மையை சொல்வதாக ஒரு பொய்யை சொல்லி விட்டு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொன்னால் , சின்ன பிள்ளைகளை விட்டுத்தான் உனக்கு பாடம் கற்பிக்க வேண்டும் ! அதில் என்ன தவறு இருக்கிறது ? இன்றைக்கு எச்சக்கலை ராஜா வை திட்டும் முடடால்களே, நாளைக்கு கவிப்பேரரசர் உங்கள் தாயையும் அப்படி சொல்ல மாட்டார் என்று என்ன நிச்சயம் ?

 • தேனீ wrote on 27 ஜனவரி, 2018, 23:18

  கவிஞர் வைரமுத்துவின் விளக்கம்

  சீமானின் கேள்வி:

  ‘தேவதாசி’ என்ற சொல்லை ஏன் ஓர் இழிவானதாகக் காண வேண்டும்? தேவனுக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டவளுக்கு மட்டுமே அந்த சிறப்பு பெயர் உரிமையானதாகும்.

  விலைமாதருக்கு ‘தேவன்’ என்ற ஒற்று வராது. இது தமிழ் இலக்கியம் காட்டும் தமிழரின் வரலாறு. இவ்வாறு தேவதாசிகளை உயர்ந்த நிலையில் வைத்து அவர்களே கோவிலில் நம் கலைகளை வளர்த்தவர் ஆவார். இவ்வாறான வரலாறு கொண்ட மகளிர் குலம் இன்றும் தலை நிமிர்ந்து வாழுகின்றார்.

  இத்தகைய பெண் குலத்திற்கு இழிவு ஏற்படும் வண்ணம் ஆக்கியது யார்?

  கோயிலில் இறைத்தொண்டு செய்கிறோமென்று கூறி அப்பெண்களையும் ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டது யார்? அந்த கோயிலில் இறை தொண்டு செய்கிறோமென்று கூறியவர்தாம் அத்தகைய பெண்களையும் தொட்டுக் கொண்டனர். அதனால்தானே அப்பெண்களை இழிவாகக் காணும் கண்ணோட்டம் அவாக்களிடமே தோன்றியது.

  தன் குற்றக் கண்ணோடு ‘தேவதாசி’ என்னும் பெண்களைக் காணுவோர்தான் அச்சொல்லாடலைக் குற்றமாகவோ அல்லது இழிவானதாகவோ கருதுவார். இவ்வாறு அரசியல் நோக்கத்தைக் கொண்டு கவிஞர் வைரமுத்துவை கலாய்த்தனர் இந்துத்துவா சமய அரசியல் நடத்தும் தமிழ் நாட்டு பா.ஜ.க. – வினர். அதற்கு தமிழ் வைணவர்களும் துணை போயினர்.

  இதற்கு ஒர் அரசியல் காரணமும் பின்ணியாக உள்ளது. கவிஞர் வைரமுத்து இராமர் கோயிலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது இராமர் மனித குலமா? பரம்பொருளா? என்று கேள்வி கேட்டு, ஒரு தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்தவர் பரம்பொருளாக முடியுமா? என்று மேலும் கேட்டு பதில் அளிக்குமாறு வேண்டினார்.

  இது இந்துத்துவாக்காரரால் விரிவாகப் பரப்பப்பட்டு கவிஞர் வைரமுத்து முஸ்லிம்களிடம் விலை போய்விட்டார் என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையே இந்த ஆண்டாள் நாச்சியார் உரையை இலாவகமாக ஊடங்களின் துணையுடன் திசை திருப்பியது இந்த இந்துத்துவா கூட்டம்.

  இவர்களால் தமிழ் நாட்டு தமிழறிஞர் இன்று மனம் துவண்டு போயுள்ளனர்.

  இப்பொழுது முட்டாள் யாரென்று புரிந்திருக்கும்.

 • Dhilip 2 wrote on 28 ஜனவரி, 2018, 12:29

  எல்லாத்துக்கும் சீமான் பின்னாடி ஓடிக்கிட்டு இருங்க , வேற வேலை ? சீமான் ஒன்னும் மக்கள் பிரதிநிதியோ அல்லது கடவுள் பிரதிநிதியோ அல்ல. எச்சகளை ராஜா வை போல் அவரும் சகா மனிதரே ! இதில் சீமான் சொல்லி விடடாள் எல்லாம் சரி என்று ஆகி விடாது ! சிவலிங்கத்தை விளக்கு என்று கேட்ட்து , முருகனை முப்பாட்டன் என்றது , இப்படி பல உள்ளது ! முருகனை ஏன்டா கும்படுறிங்க , அவன்தான் மனிதன் ஆச்சே னு நானும் கேள்வி கேட்க்க முடியும் ! எனவே , வாயாலே வடை சுடறதை நிறுத்தும் ! அடுத்தவன் வீட்டு பெண்களை இழிவு படுத்தாதே வைரமுத்து என்று ஒரு அரை கொடுக்குனும் !

 • தேனீ wrote on 28 ஜனவரி, 2018, 22:05

  இதற்குதான் இந்து மதத்தைப் பற்றியும் தெரியாது தான் நிற்கும் சமயத்தைப் பற்றியும் அறைகுறையாகத் தெரிந்து கொண்டு எல்லோரையும் குழப்ப வேண்டாமென்பது.

  மனிதனும் தெய்வமாகலாமென்று கண்ணதாசன் சொன்னதின் பொருண்மை புரிய வேண்டும். மானுடரில் ஒழுக்கச் சீலர்களாக வாழ்ந்து மெய்ப்பொருளை அறிந்தோர் தெய்வமாகலாம். அவர் வணக்கத்துக்குறியவர். அவர்களே சான்றோர். இத்தகைய சான்றோரில் எண்ணிலடங்காதோர் பர முத்தியும், பத முத்தியும் அடைந்தோரும் உண்டு. இன்னும் பலர் சீவன் முத்தர்களாகவும் நம்மிடையே வாழ்வதுண்டு.

  இப்படி முத்தியின்பம் பெறும் ஆன்மாக்களில் சில ஆன்மாக்கள் இறைவனால் அதித்திக்கப்பட்டு அவரவருக்கு அளித்த படைத்தல் காத்தல் தொழிலைச் செய்வர். அவ்வாறு இத்தொழில்களைச் செய்வோரே அயன் திருமால் என்று சைவம் பகரும். இதுவும் இவ்வாறு முத்திப் பெற்ற ஆன்மாக்களுக்கு கொடுக்கப் படும் ஒரு பதவியே. பல யுகங்களில் பல பிரம்மாக்களும், நாராயணன்களும் தோன்றி மறைந்துள்ளனர் என்பதை வடமொழி சைவ புராணங்களும் கூறும் திருமுறையில் அப்பர் பெருமானும் கூறுகின்றார்.

  “நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
  ஆறு கோடி நாராயண ரங்ஙனே
  ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
  ஈறி லாதவன் ஈச னொருவனே.” (தி. 5:100:3)

  “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே” என்பதைத்தான் திருவள்ளுவர் ‘தனக்குவமை இலாதான்” என்று கூறினார்.

  இப்படி சமய நெறிகளை அறிந்து அறியாமையில் வாழ்வோருக்கு நல்வழி காட்டத் தெரியாமல் தன் குறையை மறைக்க மற்றவர்களைத் திட்டுவதை நிறுத்தினால் பிற மதத்தைச் சார்ந்த தமிழ் சகோதரர் நம்மை மதிப்பார். இல்லையேல், நம்மைப் பார்த்து எள்ளி நகையாடுவார். இத்தோடு நிறுத்தினால் நல்லது. சிவசிவ.

  முடிந்தால் கவிஞர் வைரமுத்துவை அறைந்து விட்டு வந்து செம்பருத்தியில் உம்தம் புகழைப் பாடிக்கொள்ளலாம்.

 • abraham terah wrote on 29 ஜனவரி, 2018, 12:38

  இனி மேல் திலிப் 2 பின்னாலே தமிழர் அனைவரும் ஓடுவோம்!

 • தேனீ wrote on 14 பிப்ரவரி, 2018, 18:22

  தமிழுக்காக கவிஞர் வைரமுத்துவின் எழுச்சிமிகு சொற்பொழிவு

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: