ஒருதலைப்பட்சமான மதமாற்ற வழக்கில் இந்திரா காந்திக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்திரா  காந்தி  அவரின்   பிள்ளைகள்  ஒருதலைப்பட்சமாக    மதமாற்றம்    செய்யப்பட்டதை   எதிர்த்து    அவரின்  முன்னாள்   கணவர்   ரித்வான்  அப்துல்லாவுக்கு   எதிராக    தொடுத்திருந்த   வழக்கில்    உச்ச  நீதிமன்றம்  இந்திரா  காந்திக்கு  ஆதரவாக     தீர்ப்பளித்தது.  முஸ்லிம்- அல்லாத   பிள்ளைகளை  முஸ்லிம்களாக   மதமாற்ற   பெற்றோர்   இருவரின்   சம்மதம்  தேவை    என்று   அது  கூறியது.

 

அரசமைப்பு,  பகுதி  12(4)இல்    வரும்    “பெற்றோர்”  என்ற  சொல்  ஒரு  பன்மைச்  சொல்  என்றும்  அது  தீர்ப்பளித்தது.

எனவே,   ஒரு  குழந்தையை  மதம்  மாற்றுவதற்குப்  பெற்றோர்  இருவரின்  சம்மதமும்    தேவை  என்று   கூறிய   உச்ச   நீதிமன்றம், மேல்முறையீட்டு   நீதிமன்றத்தின்   தீர்ப்பைத்    தள்ளுபடி    செய்தது.

இது,  2007-இல்  ஆர். சுபாஷினி  vs  டி.சரவணன்   வழக்கில்   அளிக்கப்பட்ட   தீர்ப்பிலிருந்து  மாறுபடுகிறது.    அந்த   வழக்கில்    முஸ்லிமாக   மதம்  மாறிய  கணவர்   தன்   சம்மதமின்றி    பிள்ளைகளை  மதமாற்றிய  விவகாரத்துக்குத்   தீர்வுகாண  விரும்பும்  ஒரு     இந்து   மனைவி   ஷியாரியா   நீதிமன்றத்தைத்தான்   நாட    வேண்டும்    என்று   கூறப்பட்டது.

இது  ஒருமித்த  தீர்ப்பு   என்று  நீதிபதிகள்   குழுவுக்குத்   தலைமையேற்ற    நீதிபதி    சுல்கிப்ளி   அஹமட்   மகினுடின்   கூறினார். ஒருதலைப்பட்ச  மதமாற்றம்    ஒரு  சர்ச்சைக்குரிய   விவகாரம்    என்றாலும்     தீர்ப்பளிப்பதற்கு  சமய  நம்பிக்கைகள்   குறுக்கே  நிற்கவில்லை    என்றாரவர்.