தைப்பூசத்தில், கண்டனத்துக்கு உள்ளான ‘மிருக வதை’

பினாங்கு தைப்பூசத்தில், இரதத்தை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரு காளைகள் குறித்து, பினாங்கு இந்து ஆலோசனை அறவாரியம் (எல்.பி.எச்.பி.) கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல், சமூக ஊடகங்களில் பரவலாக உலாவந்த, அந்த ‘விலங்கு வதை’ வீடியோ கிளிப், பலரின் விமர்சனத்துக்கு ஆளானது, அச்செயலைப் பார்த்து பலர் ஆத்திரமடைந்தனர்.

அந்த வீடியோவில், இரண்டு காளைகள், 127 ஆண்டுகள் நிறைந்த சிலை வைக்கப்பட்டிருந்த காரை இழுக்கப் பயன்படுத்தப்பட்டதைக் காணலாம். அதே நேரத்தில், அவ்விலங்குகளின் நிலையைப் பொருட்படுத்தாது, சுமார் 20 பேர் அந்தக் காரில் இருந்தனர்.

எல்.பி.எச்.பி. தலைவர், பி.இராமசாமி, இதுபோன்ற “கொடூரமான செயல்”-ஐ அனுமதிக்க கூடாது என்றும், இவ்விஷயத்தில் அறவாரியம் தலையிடும் என்றும் கூறினார்.

“விலங்கு வதைக்கு எதிரான கடுமையான விதிகள் நமக்கு உள்ளன. உலகெங்கிலும் இலட்சக்கணக்கானோர் இணையும் இதுபோன்ற புனித நாள்களில், விலங்குகள் மீதான இத்தகைய நடவடிக்கைகளை நாம் நிறுத்த வேண்டும்,” என்று ராமசாமி கூறினார்.

இதற்கு முன்னர், தைப்பூசத்தன்று, இரதத்தைப் பெண்கள் உட்பட பக்தர்களே இழுத்தனர் என்று அவர் சொன்னார்.

“நீங்கள், பக்தர்கள் இரதம் இழுப்பதை விரும்பவில்லை என்றால், நான்கு சக்கரவண்டியைப் பயன்படுத்தி இருக்கவேண்டும். பாரம்பரியம் என்பது நல்லதுதான், ஆனால் அது கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவம், நேற்றிரவு பினாங்கு, ஜாலான் உத்தாமாவில் நடந்ததாகத் தெரிகிறது. முருக பக்தர்கள் சாலையின் இருமறுங்கிலும் வரிசையாக நிற்க, இரு காளைகளும் ஜாலான் கெபுன் தே-இல் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை நோக்கி இரதத்தை இழுத்ததாகத் தெரிகிறது.

அது  ‘சரியான செயல் அல்ல’ என்பதால், இரதத்தை இழுக்கக் காளைகளைப் பயன்படுத்திய பாரம்பரியத்தை, இந்திய அரசு நிறுத்தி விட்டதாக இராமசாமி கூறினார்.

“இது கொடூரமானச் செயல் மட்டுமல்ல, இப்புனித நாளை மதித்துப் போற்றும், உலகெங்கும் உள்ள, விலங்குகளை நேசிக்கும் பலரின் மனதைக் காயப்படுத்தும் செயலும்கூட,” என்று மேலும் அவர் சொன்னார்.

“இது கொடூரமானது அல்ல, ஆனால் தீபூசின் புனித விழாவை மதிக்கின்ற மற்றும் பாராட்டியுள்ள உலகம் முழுவதிலுமுள்ள விலங்குகளின் இதயங்களை அது காயப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

ஆனால் தீபூசின் புனித விழாவை மதிக்கின்ற மற்றும் பாராட்டியுள்ள உலகம் முழுவதிலுமுள்ள விலங்குகளின் இதயங்களை அது காயப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிய, மலேசியாகினி  செட்டியார் கோயில் நிர்வாகக் குழுவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது.