இஸ்லாமிய அரசாங்கத்தை ‘இரக்கமற்றதாக’ விவரிக்கும் ‘பத்மாவாதி’ படத்திற்குத் தடை

இஸ்லாம் ஆட்சியாளர் ஒருவரின் இஸ்லாமிய ஆட்சி, மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக விவரிக்கும் போலிவூட் படம் ‘பத்மாவாத்’ –க்கு விதித்தத் தடையைப் புத்ராஜெயா தக்க வைத்துள்ளது.

அப்படத்திற் விதித்தத் தடையை நீக்கம் செய்ய, மலேசியத் திரைப்பட விநியோகிப்பாளரால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டைத், திரைப்பட மேல்முறையீட்டுக் குழுவினர் தள்ளுபடி செய்தனர்.

போலிவூட் நாயகி தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பத்மாவாத்’, இந்தியாவில் இடைக்காலத்தில், ஓர் இந்து இளவரசி மற்றும் ஓர் இஸ்லாமிய அரசனுக்கும் இடையேயான காதலை விவரிக்கும் கதையாகும்.

இந்தப் படத்தில், சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் குணாதிசயத்தை, ‘திமிர் பிடித்த, கொடூரமான மற்றும் மனிதத் தன்மையற்ற’ ஒருவனாக விவரிக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறியுள்ளது.

எனவே, அது இஸ்லாத்தின் தோற்றத்திற்கு நல்லது அல்ல, ஏனெனில் சுல்தான் ‘இஸ்லாமிய சுல்தான்’-ஐ பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு கூறுகிறது.

சுல்தான் அலாவுதின், 1296 மற்றும் 1316-க்கு இடையில், இந்தியாவை ஆட்சி செய்த கில்ஜி வம்சத்திலிருந்து வந்தார்.

முன்னதாக, ‘பத்மாவாத்’ ஜனவரி 25 முதல், நாடு முழுவதும் 90-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. மலேசியாவில், பாக்ஸ் ஆபிஸில் இப்படத்தின் வழி, RM5 மில்லியன் சம்பாதிக்க ‘ஆண்டெனா எண்டர்டேய்மென்ட்’ மதிப்பிட்டு இருந்தது.

கடந்த வாரம், திரைப்படத் தணிக்கை வாரியம் இப்படத்தை உள்ளூர் சினிமாவில் திரையிட தடைசெய்வதாக அறிவித்தது.