அரசு உயர் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதில் இருகட்சி பங்கேற்பு

பக்கத்தான்  ஹரப்பான்    ஆட்சி  அமைத்தால்   அரசாங்க   உயர்   அதிகாரிகளை  நியமிப்பதில்    எதிர்க்கட்சியினரும்  பங்கேற்ப   வாய்ப்பளிக்கப்படும்.

இன்று   புத்ரா  ஜெயாவில்   ஹரப்பான்   பிரதமர்   வேட்பாளர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   முன்வைத்த   உருமாற்றத்   திட்டத்தில்  இந்த   உறுதிமொழியும்   அடங்கியிருந்தது.

நடப்பில்  அரசாங்க  உயர்  பொறுப்புகளுக்கு    அதிகாரிகள்  நியமிக்கப்படும்போது  பிரதமர்  ஒரு  பெயர்ப்  பட்டியலை  மாமன்னரிடம்  சமர்பிப்பார். அதிகாரிகள்  குறித்து  விளக்கமளிப்பதெல்லாம்  பிரதமர்  மட்டுமே.

“இதை  இருகட்சியினரும்  பங்கேற்கும்  வகையில்   மாற்றி   அமைக்கப்போகிறோம்.  உயர்ப்பதவி   வேட்பாளர்கள்  ஒவ்வொருவரையும்   நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  கேள்வி   கேட்பார்கள்.

“அதாவது   நாங்கள்    ஆட்சிக்கு   வந்தால்,   அரசாங்க  உயர்   அதிகாரிகளை  நியமிக்கும்   அரசாங்க   விவகாரத்தில்   பங்கேற்க    எதிர்க்கட்சிகளுக்கும்   வாய்ப்பளிப்போம்.  உயர்ப்பதவிகளுக்கு  நியமிக்கப்படுவோர்   தகுதியானவர்களாக  இருப்பதை    நாடாளுமன்ற  உறுப்பினர்கள்   உறுதிப்படுத்திக்  கொள்வார்கள்”, என  மகாதிர்  கூறினார்.

மற்றவற்றோடு   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீஸ்,  சட்டத்துறைத்    தலைவர்   போன்றோர்   நியமனங்களில்    இந்த   முறை   பின்பற்றப்படும்   என்றாரவர்.

ஹரப்பான்   அரசாங்கத்தில்   பிரதமரின்  அதிகாரமும்  ஒரு  கட்டுக்குள்  வைக்கப்பட்டிருக்கும்.