விரல் சப்பும் பழக்கமும் தேசிய முன்னணியின் அசிம் திட்டமும்!

வெண்மதி: அக்கா, உன் பையன் கட்டைவிரல் சப்புற பழக்கத்தை எப்படி விட்டான்?

வான்மதி: அது அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல… இடுப்புல நிக்காத தொள தொள கால் சட்டையைப் போட்டு விட்டேன்….அவ்வளவுதான்.. ..; அதுனால அவன் பட்ட பாடு எனக்குதானேத் தெரியும்!  அந்த கால்சட்டை நழுவாம இருக்க, அப்பப்ப இரண்டு கையாலையும் பிடிச்சு பிடிச்சே விட்டுக் கொண்டு இருந்தவன், காலப் போக்குல  கட்டைவிரல் சப்பும்  பழக்கத்தை மறந்துட்டான்.

இது எப்படின்னா.. நாம்கூட, விலைவாசி, வேலைவாய்ப்புப் பிரச்சினை, கல்விக் கூடத்துல இடப் பிரச்சினை, ஏழ்மை, ஏற்றத்தாழ்வு, பெட்ரோல் விலை உயர்வு எல்லாத்தையும் மறக்க தமிழ்ப்பள்ளிக்கு மானியம், ஆலயத்துக்கு மானியம் என்று நாள் தவறாம செய்திய படிக்கும்படி செய்யுறாங்கள்ள; அது போலத்தான்!

என்னன்னா, இப்பொழுது தேர்தல் காலம் என்பதால, அது என்ன பொன்னு, மறந்து போச்சு.. ஆங்க்.. வந்துருச்சி புள்ள மனசுல ‘அசிம்’  திட்டம்…

வெண்மதி: அது என்னாக்கா ‘அசிம்’  திட்டம்…

வான்மதி: அதுதான் புள்ள, அமானா சகாம் 1 மலேசியத் திட்டம், அப்புறம், இந்தியர்களுக்கு கட்டுப்படி வீட்டுடைமைத் திட்டம் என்றெல்லாம் அடிக்கடி செய்தி சொல்றாங்க; செய்தி போடுறாங்க.. இல்லையா?

இதெல்லாம் ஏன்னா..? இப்படி தொள தொள சட்டையை மாட்டி விட்டுட்டா… மக்கள் அனைத்தையும் மறந்து அதப் பிடிச்சுக்கிட்டே அலைவாங்க இல்லையா? அதுக்காகத்தான்.

– மாசற்றான்.