சீனப்புத்தாண்டு நெருங்கி வரும்வேளையில், ரோன்95 2 காசு உயர்கிறது

இன்று நள்ளிரவு தொடக்கம், ரோன்95 2 சென்னும், ரோன்97 3 சென்னும் உயர்கிறது.

அடுத்த 1 வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.33 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.61 ஆகவும் விற்கப்படும்.

டீசலின் விலை, 3 சென் குறைந்து லிட்டருக்கு ரிம2.31 ஆக விற்கப்படும்.

சீனப் புத்தாண்டு காலகட்டத்தில், இந்தப் பெட்ரோல் விலை ஏற்றம், பெருநாள் கொண்டாட்டத்திற்கு வீடு திரும்பும் மக்களிடமிருந்து நிறைய புகார்களை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த வாரம், அனைத்து வகையான வாகன எரிபொருளின் விலைகளும் 2 சென் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.