மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு ‘தமிழர் வரலாறு’ வகுப்பு

பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் டத்தோ அசித் அப்துல் வகாப் இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த இன, மொழி, வரலாறு, வாழ்வில் குமரிக் கண்ட தொன்மையை விளக்க மாதாந்திர தமிழர் வரலாறு வகுப்பு மலேசிய நாம் தமிழர் இயக்கம் நடத்தி வருகிறது

உலகத்தின் மூத்த மொழி தமிழ்..!
உலகத்தின் மூத்த மாந்தன் தமிழன்..!
உலகத்தில் அதிக நிலப்பரப்பை ஆண்டவன் தமிழன்..!
உலகின் முதல் கப்பல் படையை நிறுவி, கடலில் படை நடத்தியவன் தமிழன்..!
இமயம் முதல் குமரி வரை, கங்கை தொடக்கம் கடாரம் வரை எட்டுத்திக்கிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்டவன் தமிழன்..!

இப்படி பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமிப்பந்தில் சுமார் 50,000 ஆண்டுகள் மூத்த வரலாற்றுப் பெருமைக் கொண்ட தமிழ் தேசிய இனம், நமது தமிழர் இனம்.

ஆனால் இன்று நாம்
தனது சொந்த இன மொழி வரலாறு அறியாதவரகளாக பலர் பழிக்கும் வண்ணம் அடையாளம் இழந்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்.

அத்துடன் நமது வரலாறு திட்டமிட்டு அன்னியர்களால் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு
முகவரியற்றவர்களான சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு விட்டது .

நமது இனத்தின் சிறப்பு, கொடை, அறம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர்களின் ஆட்சி முறை, ஒழுக்கம், தியாகம், திறன், வீரம், வெற்றி இவையெல்லாம் பயிற்றுவித்து, தன் சொந்த வரலாற்றை அறிந்து தமிழ் மொழி, தமிழர் இன அடையாளத்துடன் வாழ, இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு வரலாற்றை போதிக்கிற அரும்பெரும் பணியில் மலேசிய நாம் தமிழர் இயக்கம் இறங்கியுள்ளது.

எதிர்வரும் 11.02.2018-ம் நாள் காலை 8.30க்கு மணிக்கு வகாப் இடைநிலை பள்ளியில் மாதாந்திர தமிழர் வரலாறு வகுப்பை நாட்டின் முதன்மை தமிழ் ஆய்வு பேரறிஞர் ஐயா தமிழ்த்திரு இர. திருச்செல்வனார் அவர்கள் வழிநடத்தவது குறிப்பிடத்தக்கது.

திட்டமிட்டு மறைக்கப்பட்ட நம் வரலாற்றை கட்ட கட்டமாக உலகுக்கு பரப்புவோம்.

வரலாற்றை மறந்த எந்த இனமும் வாழ்ந்ததாக வரலாறு கிடையாது
வரலாற்றை அறிந்த எந்த இனமும் வீழ்ந்ததாக வரலாறு கிடையாது

தொடர்புக்கு 0143099379