திடமாய் இருப்பீர்: ரபிசிக்கு மகாதிர் அறிவுரை

டாக்டர்    மகாதிர்    முகம்மட்,     ஷா  ஆலம்  செஷன்ஸ்  நீதிமன்றம்   30மாதச்  சிறைத்தண்டனை   விதித்தது  குறித்து  மனம்  தளர்ந்துவிடக்  கூடாது   என  பிகேஆர்  உதவித்   தலைவர்   ரபிசி  ரம்லிக்கு    அறிவுறுத்தியுள்ளார்.

“ரபிசி   திடமாய்  இருக்க   வேண்டிய   தருணம்  இது.  மனம்  தளர்ந்து  விடாதீர்கள்”,  என  பக்கத்தான்   ஹரபான்   தலைவர்  இன்று   காலை  முகநூலில்   பதிவேற்றம்    செய்யப்பட்ட   ஒரு  காணொளியில்    குறிப்பிட்டார்.

ஒரு  போராட்டத்தைப்  பல  காலம்   நடத்த  வேண்டியிருக்கும்,  முடிவில்  வெற்றி  கிட்டலாம்  அல்லது   தோல்வியில்   முடியலாம்  என  அந்த   92-வயது   முன்னாள்   பிரதமர்   கூறினார்.

“ஆனால்,  நாம்   போராட்டத்தை   நிறுத்தக்  கூடாது,    இனத்துக்காகவும்   நாட்டுக்காகவும்     அதைத்     தொடர   வேண்டும்”,  என்றவர்  சொன்னார்.