ஹரபான்: சிலாங்கூரில் 15, 20 தொகுதிகள்மீது பேச்சுகள் தொடர்கின்றன

சிலாங்கூர்   பக்கத்தான்   ஹரபானின்     பொதுத்   தேர்தலுக்கான   தொகுதிப்  பங்கீட்டுப்   பேச்சுகள்  இன்னும்   முடிவுபெறவில்லை.

15-20  தொகுதிகள்  யாருக்கு   என்பது  இன்னும்   இறுதி   செய்யப்படவில்லை  என்கிறார்   சிலாங்கூர்  பக்கத்தான்  ஹரபான்   தேர்தல்    இயக்குனர்  டாக்டர்  சேவியர்   ஜெயக்குமார்.

“இன்னும்  முடிவு  பெறவில்லை.  பேசிக்  கொண்டுதான்  இருக்கிறோம்.

“15, 20  தொகுதிகள்மீது    இணக்கம்   காணப்பட   வேண்டியுள்ளது”,  என இன்று    ஷா  ஆலமில்   செய்தியாளர்களிடம்    அவர்   தெரிவித்தார்.

நான்கு   ஹரபான்  கட்சிகளும்   சீனப்  புத்தாண்டுக்  கொண்டாட்டங்களுக்குப்  பிறகு  மீண்டும்   சந்திக்கும்  என  பிகேஆர்   உதவித்   தலைவருமான   ஜெயக்குமார்  கூறினார்.

சிலாங்கூரில்   வெற்றிபெற   வேண்டும்   என்ற  ஒருமித்த   கருத்தை  அனைத்துக்  கட்சிகளும்    கொண்டிருப்பதாக    அவர்   சொன்னார்.

“பேச்சுகள்   சீனப்  புத்தாண்டுக்   கொண்டாட்டத்துக்குப்  பிறகு   தொடரும்.

“இன்று   எந்த  முடிவும்  காணப்படவில்லை”,  என்றார்.  இரண்டு  மணி  நேரம்  நடைபெற்ற  இன்றைய   கூட்டத்தில்    நான்கு  கட்சிகளும்  கலந்துகொண்டதாக     அவர்   கூறினார்.