நீங்கள் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த நாங்கள் யார்?

– தமிழ்ப்புகழ் குணசேகரன், மலேசியத் தமிழர் களம் 

மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து தகுதிகளும் இந்து சங்கத் தலைவராக இருக்கக் கூடிய தனக்கு இருப்பதாக டத்தோ மோகன் சான் நாளிதழ் அறிக்கையில் கூறியிருப்பது, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.

இணையத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், மோகன் சான் அவர்கள், தன் தந்தை நாயர் சாதியைச் சார்ந்த மலையாளி என்றும், தன் தாயார் நாயுடு சாதியைச் சார்ந்த தெலுங்கர் என்றும் ஆனால் தனக்கு மலையாளமோ தெலுங்கோ பேசத் தெரியாது என்றும், தனக்குத் தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் தான் தமிழர் என்றும், அதனைக் கூறினால் தமிழர்களுக்கு விளங்கமாட்டேன் என்கிறது என்றும் புலம்பியிருக்கிறார். இவருக்கு மலாய், ஆங்கிலம் கூட தெரியாது என்றே நினைக்கிறேன்.

தன் பெற்றோர் தமிழர் அல்ல என்று கூறும் இவர்மட்டும் எப்படி தமிழரானார் என்பது, அவர் கூறுவது போல் தமிழர்களுக்கு விளங்கவில்லைதான் ! தமிழருக்குப் பிறக்காத இவர் தமிழர் என்றால், தமிழருக்குப் பிறந்த நாங்கள் இன அடையாளம் இல்லா நாதியற்றவரா?

எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு காரணத்தைக் காட்டி, அதனால் தான் தமிழன் என்று கூறுவது கேவலமானது, கேளிக்குறியது.

மலேசிய இந்து சங்கம் எப்பொழுதெல்லாம் தமிழ் மொழிக்குச் சிக்கல் வருகிறதோ, அப்பொழுதெல்லாம் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை என்று கூறியுள்ளார். அது எப்போது என்றுதான் புரியவில்லை.

ஆனால், மொழியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் இவரும் இவரைப் போன்ற இனமறைப்பாளர்களும் தமிழர் என்ற இனத்திற்கான தன்னெழுச்சிக்கும் மீட்சிக்கும் என்றும் துணை நின்றதும் கிடையாது, இனி நிற்கப்போவதும் கிடையாது.

ஈழத்திலே பெருவாரியான இந்து நம்பிக்கையை ஏற்றிருந்த தமிழர்களைப் பௌத்த சிங்களவர்கள் கொன்றொழித்த போது இந்து சங்கம் அந்த இந்துக்களுக்காக என்ன போராட்டத்தை முன்னெடுத்தது என்று தெரியவில்லை.

இங்கு சிக்கல் என்னவென்றால், அவர்கள் கேட்ட விடுமுறையால் நமக்குச் சிக்கல் இல்லை, தை 1-க்குக் கிடைக்காத விடுமுறை தேவையும் இல்லை. ஆனால், தமிழரல்லாத மோகன் சான் மலேசியத் தமிழர்களைத் தன்மானமில்லாத முட்டாள்களாக எண்ணிக்கொண்டு, தான்தோன்றித்தனமாகத் தன்னைத்தானே தமிழர்களின் பிரதிநிதி என்று மலேசிய அரசிடம் நாடகம் ஆடியிருப்பது மன்னிக்க முடியாத தவறாகும். இதற்கு அவர் மன்னிப்பு கேட்காது மழுப்பலான பதிலைத் தருவது கோமாளித்தனம்.

இவ்வளவு எதிர்ப்புகள் தமிழர்களிடமிருந்து கிளம்பிய பின்னும், திமிராக மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் தகுதி தனக்கே இருக்கிறது என்று அவர் நாளிதழில் கூறியிருப்பது, ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்ப்பதே அன்றி வேறொன்றுமில்லை, இதனை மலேசியத் தமிழர் களம் வன்மையாகக் கண்டிக்கிறது.

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • ஜி. மோகன் - கிள்ளான் wrote on 13 பிப்ரவரி, 2018, 11:53

  தமிழ் நாட்டில் தான் இந்த சாபக்கேடு என்றால் நம் நாட்டிலுமா. தமிழனை எந்தனை நாள்களுக்கு இப்படியே இருப்பான் என்று நினைத்தீர்கள். இன்று கனினி தொழில்நுட்ப இடத்தில் நாம் இருபதால் இனி வரும் காலங்களில் பலிக்காது ராஜா உங்களின் இந்த மோசடி செய்கைகள். இன்று தமிழ் நாட்டில் ஒரு சீமான் போன்று இங்கும் நிறைய சீமான் போன்று இருக்கிறார்கள். நமக்கு இங்கு போறிட சன்டை போட நமது தமிழ் பள்ளியில் போதிக்கும் ஆசிரியர்கள் தெலுங்கர், மலையாளி இருப்பினும் அவர்கள் போதிப்பது தமிழையே. தமிழ்ப்புகழ் குணசேகரன், மலேசியத் தமிழர் களம் போன்ற நல்ல பல தலைவர்கள் நம்மிடையே உண்டு. இப்போது முதலில் கேட்டு கொள்வது நமக்கு தமிழர்களுக்கு இந்து என்ற சங்கம் தேவை இல்லை. அது தமிழர்கள், தெலுங்கர், மலையாளி, சீக்கியர், சேர்ந்த சகோதரர்கள் தான் இந்து சங்கம்.( திரு.
  மோகன் சான் அவர்கள், தன் தந்தை நாயர் சாதியைச் சார்ந்த மலையாளி என்றும், தன் தாயார் நாயுடு சாதியைச் சார்ந்த தெலுங்கர் என்றும் ஒப்பு கொண்டு உள்ளார். பிறகு எங்கே தமிழ் ரத்தம் ஓடுகிறது. நீங்கள் உங்கள் மதத்தை தெரிந்தும் அது எனக்கு பேச தெரியவில்லை என்று சொல்வது உங்கள் மதத்தை அவமானம் படுத்து இல்லையா. மொழி எனும் வரும் போது தமிழ் எங்கள் உயிர் என்று பெறுமையாக சொல்லி கொள்ள பெறுமை படுகிறோம். உங்களை போன்று மூன்று முச்சந்தியில் நின்றுகொண்டு தடுமாறி அறிக்கை விடுவது சிறிப்பு வருகிறது. பதவி பணம் சுகத்தை கண்டு விட்டால் என்ன அவமானம் வந்தாலும். பதவி விட்டு போக மாட்டேன் என்று சொல்வது இந்து மதத்திற்கு நன்மைகள் தரும்மா. சிந்திப்போம்….

 • அலை ஓசை wrote on 13 பிப்ரவரி, 2018, 18:46

  மோகன் ஷான் என்ற இரண்டும்
  கெட்டான்பூனைக்குட்டி வெளியே
  வந்துவிட்டது,உண்மையை
  ஒப்புக்கொண்ட சானக்கு நன்றி,
  சாமிவேலு மறைகேடாக பல
  கோடிகளை சேர்த்திருக்கலாம்.ஆனால்
  ம,இகாவில் தமிழரல்லாதவர்களை
  உயர் பதவிக்கு வராமல் பார்த்துக்
  கொண்டார்,சானின் கோரிக்கை
  ஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்நாட்டு
  தமிழர்களுக்கும்,ம இகாவுக்கும்,
  தீராத களங்கம்!

 • உழவன் wrote on 13 பிப்ரவரி, 2018, 20:42

  அப்படினா, தெலுங்கு மொழி தெரியாத மோகன் சானை தெலுங்கு மாநாட்டில் உள்ளே விடுவார்களா? மலையாளி மாநாட்டில்? தமிழன் மட்டும் இழிச்சவாயனா?. அவன் தலையில் மிளகாய் அரைக்க.
  தமிழ் நாட்டில் திராவிடன் என்ற பெயரில் நம்மை ஏமாற்றுகிறான். மலேசியாவில் இந்தியன் என்ற பெயரில் நம்மை ஏமாற்றுகிறான்.கவனம் தமிழ் சொந்தங்களே.

 • Dhilip 2 wrote on 14 பிப்ரவரி, 2018, 4:40

  “பிறகு எங்கே தமிழ் ரத்தம் ஓடுகிறது” என்று ஜி. மோகன் – கிள்ளான் அவர்கள் கேட்க்கிறார். நான் அவரை கேட்க்கிறேன் : மோகன் ஷான் அவர்கள் தப்பே செய்திருந்தாலும் , அவரை விமர்சனம் செய்யுங்கள், திருந்த வழி செய்யுங்கள் ! பிரச்னை அப்படியே கிடக்கு ! அதை விடுத்து தேவை இல்லாமல் அவர் அம்மாவை எதற்கு இழுக்க வேண்டும் ? அப்போ உங்களுக்கு நித்யானந்தா சீடர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும் ! ரத்தத்தில் ஏதடா ஜாதி மதம் இனம் அவை பித்தத்தினால் எரிய குணம் !

 • ஜி. மோகன் - கிள்ளான் wrote on 14 பிப்ரவரி, 2018, 11:53

  முட்டாள்தனம் மான கேள்விக்கு பதில் சொல்ல நான்வரவில்லை. வேட்டி பேச்சு பேசுபவனிடம் சற்று விலகி இருபபதே மேல். என்று நினைப்ப வன். நாம் எதை சொன்னாலும் சற்றும் யோசிக்காமல் தான் சொல்வதே சரி என்பவரிடம் வாக்குவாதம் செய்வது சிறப்பாக இருக்காது என்று நினைக்கிறேன் . நான் சொல்ல வந்த கருத்தை திசை திருப்பி பேசுவது உங்களின் கலையாக இருக்கலாம். நடைமுறை யில் உள்ள சொல் அது. உனக்கு என்ன நல்ல ரத்தம் ஓடுத அல்லது கெட்ட ரத்தம் ஓடுத என்று நாம் பேசும் போது உதிரும் சகஜமான வார்த்தைகள். ஐயா. திரு ஹன் மோகன் அவர்களின் அம்மாவை இழுத்து எழுதுவதற்கு நான் ஒன்றும் அவனை. போன்று மஞ்சள் பத்திரிகை எழுதும் எழுதுபவன் இல்லை. வயது முதிர்ந்த திரு. ஹன் மோகன் தாய் எனக்கும் தாய் போன்ற வர்தான். என அம்மா போன்றவர். பிறப்பிள் வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் எல்லோரும் தாயின் அன்புக்கு கட்டுபட்டவர்கள் . அப்படி பட்ட தாயை விமர்சனம் செய்வது என்னை நானே விமர்சனம் செய்வது போன்று. திரு ஹன் மோகன் அவர்கள் தயவுசெய்து தவறாக என்னை என்ன வேண்டாம். ஒரு சில அறை வேக்காடு கள் தமிழை அறை குறையாக படித்து விட்டு வேட்டி பேச்சு கள் மூலமாக வார்த்தை களை அள்ளி வீசுவது அவன்களின் ரத்தத்தில் ஊறியது என்று நினைகிறேன். ஒரு அறிவாளியிடம் வாக்குவாதம் செய்தால் பல நல்ல கருத்துகள் வரும். அதுவே ஒன்றும் இல்லாத வேட்டி பேச்சு பேசுபவரிடம் பேசுவது பழகுவது சிறப்பாக இருக்காது. இன்னும் சற்று கூடுதலாக எழுதினால் என்னை பச்சோந்தி என்பான் இந்த அறைவேக்காடு குப்பையை கிளறி நாற்றத்தை உள் வாங்குபவர் போல.

 • மு.சுப்பிரமணியன் wrote on 14 பிப்ரவரி, 2018, 15:49

  Dhilip என்ற பெயரில் எழுதும் பிறவியும் இரண்டும் கெட்டான் போலத் தெரிகிறது. தமிழ், தமிழன் என்றாலே பொத்துக் கொண்டு வருகிறது.

 • இளந்தமிழன் wrote on 15 பிப்ரவரி, 2018, 2:55

  எனக்கும் அதே சந்தேகம் உள்ளது. ஒருவேளை Dhilip2 மலையாளத்திற்கும் தெலுங்குக்கும் பிறந்த கன்னட தமிழரோ?

 • உழவன் wrote on 15 பிப்ரவரி, 2018, 11:08

  புலி வேசம் போடுபவனை நம்பினாலும் நம்பலாம், தமிழர் என்று வேசம் போடுபவனை நம்பகூடாது. 2009ல் தமிழர் என்று வேசம் போட்ட கருணாநிதியின் உண்ணாவிரதம் நினைவில் கொள்க.https://youtu.be/7M91xJPk4fA

 • தேனீ wrote on 15 பிப்ரவரி, 2018, 13:12

  இந்த தமிழர், தெலுங்கர், மலையாளிகள் என்ற பாகுபாடு மலேசியாவில் ஏற்பட்டதற்குக் காரணம் மலையாளி மற்றும் தெலுங்கு வமிசாவழி மக்கள் அவர்தம் சங்கங்களின் மூலம் நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று வேற்றுமை காட்டிய பிறகே நாங்கள் தமிழர் என்ற சிந்தனை மலேசிய தமிழரிடையே வலுக்கக் காரணமாயிற்று.

  இப்பொழுது தமிழர் தங்களை தமிழர் என்று பிரித்துக் கூறிக் கொள்வதால் மலையாளி மற்றும் தெலுங்கு வமிசாவழி மக்கள் வருத்தப் பட்டுக் கொள்வதில் அர்த்தமேதுமில்லை காரணம் இந்நிலை ஏற்படுவதற்கு அவர்களே காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர்.

  ஆதலால் டத்தோ மோகன் சான் தான் தமிழன் அல்ல என்று சொல்வது எப்படி பொருந்துமென்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தமிழர்களுக்கு இல்லை. அவரவர் தன்னுடையை காசிலே தனக்கே சூன்னியம் வைத்துக் கொண்ட பிறகு தமிழரை நோகுவது அர்த்தமற்றப் பேச்சு.

 • Dhilip 2 wrote on 15 பிப்ரவரி, 2018, 20:53

  முதலில் மோகன் ஷான் அம்மாவை பத்தி பேசுனீங்க , இப்ப என்னோட அம்மா அப்பாவை பத்தி பேசுறீங்க ….ஆனா பிரச்னை அப்படியே இருக்கு ! இப்படி பேசி பேசி 30 வருசமா மா இ கா தலைவனா இருந்து , ஒட்டு மொத்த இந்தியர்களின் வளர்ச்சியை கொள்ளையடிச்ச சாமி வேலு, ஒரு தமிழன் ! அப்போவெல்லாம் குச்சி மிட்டாய் சப்பி கொண்டு இருந்து விட்டு , இப்போ இந்து சங்கம் மா இ கா வுக்கு ஜால்ரா போடலணுதும் ஒரு பஞ்சாயத்து ! இப்போ இருக்கிற முக்கால்வாசி அரசியல் ஆர்வலர்கள் ஆரம்பத்திலே மா இ கா வோட அரசியலை நிழலை பார்த்து வளந்தவர்கள்தானே ? ஆரம்பத்துல மா இ கா உள்ள ஜாதியை திணிச்சு ஆண்டிங்க , இப்போது இனத்தை காட்டுரிங்க ! ரஜினி கூடத்தான் “நான் பச்சை தமிழன்” என்கிறார் ! அதனால என்ன வந்துச்சு அல்லது என்ன போச்சு ? முதலில் பிரச்னை என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். இந்தியர்களின் ஓட்டு , ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு இனி மலேசியாவில் கிடைக்காது என்றதும் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார்கள் ! இதுதான் அடிப்படை பிரச்னை. இங்கே தான் தெலுங்கர் மலையாளீ தமிழர் அவர் இவர் என்ற பாகுபாடு வளர்கிறது. இதை புரிந்து கொல்லாமல், ஒரு தவறான கருத்துக்கு 4 ஜால்ரா வேற வாயாலே வடை சுடுது ! கேட்டா தமிழனை காப்பாத்துறேன் பேர்விழி என்பது ! ஒன்னும் முடியலையா இவன் அவனுக்கு பொறந்தானா அவன் இவனுக்கு பொறந்தானா என்று வியாக்கியானம் வேற ! பிறப்பால் ஒருவன் உயர்ந்துவிட முடியாது; பிரிவினை வாதத்தால் வென்றிட முடியாது !

 • தேனீ wrote on 15 பிப்ரவரி, 2018, 22:43

  பிரிவினை வாதம் என்பது மனித குழுக்கள் தோன்றிய காலம் முதல் உள்ளதே. மனிதன் குழு குழுவாக பிரிந்து வாழத்தொடங்கிய காலம் முதலே ஒவ்வொரு குழுவும் தம்மைத் தற்காத்துக் கொள்ள பிரிவினை பாராட்டினர். இது ஒன்றும் புதியது அல்ல.

  இந்த நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் மலையாள வழிசாவழி மக்களில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டதால் இனி அவர்களுக்கு தனித்துவம் வேண்டுமென்று விரும்பி அவர்களே தங்களைப் பிரித்துக் கொண்டு போகும் பொழுது அவர்களைத் தடுத்துப் பிடிக்க தமிழர்களுக்கு என்ன வேண்டிக் கிடக்கு?

  ஆதலால் இந்த பிரிவினை வாதத்தை தள்ளி விட்டு தமிழர் வளர்ச்சிப் பெற அவர்களுக்கு இந்தியர் என்னும் அடையாளம் இனியும் தேவையில்லை என்னும் உண்மையை ஏற்றுக் கொள்வோம். தமிழரை தமிழர் என்று கூறிக் கொள்வோம் என்பார் வளர்ந்து வருகின்றார். அதை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது. வேண்டுமானால் வேறு வழியில்லாமல் செம்பருத்தியில் தனிமையில் புலம்பிக் கொண்டிருக்கலாம்.

 • ஜி. மோகன் - கிள்ளான் wrote on 16 பிப்ரவரி, 2018, 13:11

  முதலில் நன்கு பார்த்து, படித்து எழுதினால் சிறப்பாக இருக்கும். அரசியலுக்கும் இந்து மத த்திற்க்கும் என்ன சம்பந்தம். அரசியல் ஒரு சாக்கடை அதில் எல்லா மட்டைகளும் அசிங்ககளும் இருக்கும், மிதக்கும். அந்த அசிங்கத்தை ஒரு தலைவன் சிறப்பாக வழி நடத்தினார். அதில் பல மதங்கள் இருந்தன. தமிழன் அதிகமாக இருந்தமையால் தமிழரல்லாதவர்களை
  உயர் பதவிக்கு வராமல் பார்த்துக் பார்த்து கொண்டார் அதன் தலைவர். அன்று மற்ற மதத்தினர் அவரை கேள்விகள் கேட்டு இருக்கலாம். இங்கு நாம் கேட்பது தமிழன் என்று சொல்லி கொண்டு ஏன் பொய்யான அறிக்கை விட வேண்டும் என்பதே. அதன்
  இந்து சங்க தலைவர். (மலேசியத் தமிழர்களைப் பிரதிநிதிக்கும் அனைத்து தகுதிகளும் இந்து சங்கத் தலைவராக இருக்கக் கூடிய தனக்கு இருப்பதாக டத்தோ மோகன் சான் நாளிதழ் அறிக்கையில் கூறியிருப்பது, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது.) என்று கூறியது ஏன். இது தான் எங்கள் கேள்விகள். இதற்கு பதில் கூறாமல் ஏது ஏதோ சொல்லி வார்த்தைகளை அடுக்கி சொல்வது சிறப்பாக இருக்காது. முனபே நான் எழுதியது. அதாவது, நான் சொல்வது தான் சரி என்று வாக்குவாதம் செய்பவரிடம் ஒதுங்கி இருப்பது மிகவும் நல்லது. அதுவும் உங்களை போன்றவர்களிடம். நான்கு பேர் சொல்வது வாயில் வடை சுடுவது என்றால் நீங்கள் சுடுவது ரொம்பவும் நல்ல வடையோ..நீங்கள் ரொம்பவும் நல்லவரோ.

 • Dhilip 2 wrote on 17 பிப்ரவரி, 2018, 4:02

  ஒரு பிரச்சனையை பட்ரி பேசுங்கள் என்றால் அதை விடுத்து சம்பந்த பட்டவரின் தாய் தந்தையரை பட்ரி ஏன் பேச வேண்டும் ? மோகன் ஷான் அம்மாவை பட்ரி பேசவே நான் தற்க்காக வேண்டியதாகி விட்ட்து ! எனக்கும் அவரை பிடிக்காது , அது என் பிரச்னை அதை நான் சமுதாயத்த்தில் கொட்டிட மாட்டேன் ! பிறகு “ஒருவேளை Dhilip2 மலையாளத்திற்கும் தெலுங்குக்கும் பிறந்த கன்னட தமிழரோ?” என்று இளந்தமிழன் எழுதி உள்ளார் . மேலே எழுந்துள்ள பிரச்சனைக்கு எந்த ஒரு முடிவும் கிடைக்காத பாசத்தில் , ஒருவரின் பிறப்பை விமர்சிக்க என்ன வந்தது ? ஆனால் ஒருவரின் பிறப்பை கொச்சைப்படுத்த எப்படி எல்லாம் எழுதலாமோ அப்படி எல்லாம் எழுதி விட்டு , நாங்கள் மட்டும்தான் வாயாலே வடை சுடுகிறோமா என்ற கேள்வி வேறு . இது வரை நான் யாரையாவது அவர் தாய் தந்தையரின் பிறப்புக்களை கேள்வி கேட்ட்டேனா அல்லது கொச்சை படுத்தினேனா ? யாரிடம் நீதி இல்லையோ, அவன்தான் பிறப்பை பட்ட்றி பேசி கொண்டு இருக்க வேண்டும் ! தமிழராய் பிரபதினால் , அரசாங்கம் எல்லா சலுகைகளையும் செய்து விட வேண்டும் என்று கேர்ப்பதற்கு , மண்ணின் மைந்தர்களாக இருக்க வேண்டும் . நாம் இந்தியாவில் இருந்து வேலைக்கு வரவழைக்க இனம். அரசாங்க ஆவணம் அப்படிதான் உள்ளது ! 25 – 30 லட்சம் இருக்கும் இந்திய சிறும்பான்மையினர்; தெலுங்கர்களும் , மலையாளீகளுக்கும் , சீக்கியர்களுக்கு , அல்லது மற்ற சிறும்பான்மையில் சிறும்பான்மையாய் இருப்பவர்களுக்கும் ஒன்று கிடைக்க கூடாது என்று வாதிடுவது , வெறும் பொறாமையில் விளைந்தது ! அதை வைத்து கொண்டு எப்படி மற்ற தமிழர்களுக்கு நேர்வழி அல்லது நல்வழி காட்டிட முடியும் ? அங்கே உங்கள் கருத்துக்கு மாற்று கருது சொன்னால் , உடனே அவர் தாயாரை பட்ட்றி பேசுவீர்கள் ! எதிரியின் வீட்டு பெண்களை கூட கொச்சைப்படுத்தாதது தமிழர்களின் மாண்பு ! என்னிடம் இருக்கிறதே அப்படி ! உங்களிடம் அப்படி உயர்ந்த குணம் காணவில்லையே ? எனவே பிரச்சனையை மட்டும் பேசுங்கள் அதை விடுத்து அடுத்தவரின் வீட்டு பெண்களை பட்ட்றி பேசவேண்டிய தேவையில்லை! காண்டீபத்தை கிழே வைத்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கேட்க்கிறார் : திரௌபதை ஒரு மகாராணி, ஆனால் அவளின் மானத்தை காக்காத ஒரு இனம் எப்படி ஒரு சாதாரண பெண்ணின் மானத்தை காக்கும் என்று ? மானம் அவ்வளவு உயர்வானது, சமமானவர்களுக்கு மத்தியில் ! அடுத்தக்கனமே அம்புகள் அம்புறா துணியில் இருந்து இலக்கை நோக்கி பாய்ந்தன …. அப்படி ஆண்களின் சண்டையில் பெண்களை இருக்காதீர்கள் !

 • iraama thanneermalai wrote on 17 பிப்ரவரி, 2018, 8:27

  சமீப காலங்களில் யார் தமிழன் எனும் வினா நம்மிடையே எழுவதை காண்கிறோம் .தமிழில் வீட்டில் அனைவரிடமும் தமிழில் உரையாடுபவன் .மற்றொரு தமிழனிடம் தமிழில் உரையாடுபவன் , தமிழை ஆழ்மனதில் நேசிப்பவன் ,தமிழின முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பங்க்காற்றுபவன் ,சுயனலமற்றவன், தமிழர்கள் யாவரும் சமம் என ஏற்றுக்கொள்பவன் .இத்தகையவனே உண்மையான தமிழன் .இந்துமதம் ஆன்மீகத்திற்கான ஒரு வழிதான் .அது தமிழனை ஒன்ற்படுத்த தவறிவிட்டது .இனியும் செய்யாது ,சிந்திப்போம் செயல்படுவோம் ,

 • ஜி. மோகன் - கிள்ளான் wrote on 17 பிப்ரவரி, 2018, 13:35

  ஐயா Dhilip 2 அவர்களே, உங்களின் கருதுக்களை விரும்பி படிப்பவர்களில் நானும் ஒருவன். இப்போதும் கூட…அதில் ஒரு சில சமயம் சிரிப்பும் வருவதுண்டு. என்ன செய்வது…உங்களின் குணம் அப்படி. (கோபம் வேண்டாம்) அதில் ஒரு சில சமயங்களில் உங்கள் கருதுக்கள் ஆவேசம் மாகி விடுவதால் மறுமுனையில் படிபவர்கள் அதற்கு பதில் எழுதும் பொழுது நீங்களும் அதை உணர்ந்து கொண்டு எழுதினால் சிற்ப்பாக இருக்கும். இனியும் தயவுசெய்து தாய்யை பற்றி எழுதாமல் இருக்கவும். பார்துக் கொள்ளவும். நாம் எல்லோரும் வெவ்வேறு வயிற்றில் பிறந்து இருப்பினும். உங்கள் தாய் கூட எனக்கும் அம்மா போன்றவர் தான். இனியும் வேண்டாம் அந்த சொல். கார – சார எழுது இருந்தால் தான் படிப்பதற்கு நன்றாக இருக்கும். அதில் உண்மைகள் இருக்க வேண்டும். அதுவே மிஞ்சினால் ஒரு பானை சோறுக்கு ஒரு துளி விஷம் மாகி விடும். நன்றி

 • Dhilip 2 wrote on 17 பிப்ரவரி, 2018, 18:18

  “இனியும் தயவுசெய்து தாய்யை பற்றி எழுதாமல் இருக்கவும். பார்துக் கொள்ளவும்.” என்று ஜி. மோகன் – கிள்ளான் எழுதி உள்ளீர்கள். நான் யாருடைய தாய் தந்தயறையையும் அவர்களின் இனத்தையையோ அல்லது பிறப்பையையோ கேவலமாக எழுத வில்லை ! என் பெட்றோர்கள் கண்ணிய மிக்கவர்கள் , எனவே எனக்கும் அவர்கள் குணமே ! எதிரியின் வீட்டு பெண்களை கூட கொச்சைப்படுத்தாதது தமிழர்களின் மாண்பு ! அது என்னிடம் நிறைய இருக்கிறது . ஆனால் இங்கே எழுதுபவர்களிடம் அதை காணோம் . அதிலும் இவர்கள் தான் தமிழர்களின் பிரதிநிதியாம்! ஐயோ பாவம் தமிழர்கள் ! ஜி. மோகன் – கிள்ளான் அவர்களே , உங்கள் கருத்தை மேலே மற்றவர்களின் தாய் தந்தயை padre விமர்சிப்பவர்களுக்கு சொல்லுங்கள்.

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: