‘போலிச் செய்திகளை ஒடுக்குவது உண்மையென்றால் ஜாசாவை இழுத்து மூடுவீர்’

புத்ரா  ஜெயா  “போலிச்  செய்திகளை’  ஒடுக்குவதில்   உண்மையிலேயே    அக்கறை   கொண்டிருந்தால்   முதலில்  சிறப்பு   விவகாரத்  துறையை   இழுத்து    மூட  வேண்டும்    என்கிறார்   செனாய்   சட்டமன்ற   உறுப்பினர்    வொங்  ஷு  கி.

“போலிச்   செய்திகள்”  சட்டவிரோதமானவை    என்றால்,  அவற்றைப்  பரப்பும்  ஜாசா  இயக்குனர்  முகம்மட்  புவாட்  ஸ்கார்ஷியைத்தான்  முதலில்  கைது   செய்ய  வேண்டும்   என்று   வொங்   கூறினார்.

“புவாட்  போலிச்  செய்திகளைக்  கூறுவது    ‘கடும்  குற்றம்’   என்று   கூறியுள்ளார்.  ஆனால்  அரசாங்கத்தின்  பிரச்சாரப்  பிரிவான  ஜாசாதான்   தப்பான   தகவல்களைப்  பரப்பி   வருகிறது.

“போலிச்  செய்திகளைத்   தடுப்பதில்   அரசாங்கத்துக்கு   உண்மையிலேயே  அக்கறை   இருக்குமாயின்   ஜாசைவை  ஒழிக்க   வேண்டும்”,  என்றாரவர்.

அரசாங்க   நிறுவனமான   ஜாசா,   அதன்   வாட்ஸ்எப்  சேவை  வழியே பக்கத்தான்  ஹரபானுக்கு   எதிரான   தகவல்களை   அடிக்கடிப்  பரப்பி   வருவதன்  மூலமாகக்  கட்சிப்  பிரச்சார  வேலைகளைச்    செய்து  வருவதாக  அவர்  குற்றஞ்சாட்டினார்.