இபிஎப் தலைமையகத்தில் தீ

பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள   ஊழியர்   சேமநிதி   (இபிஎப்)  தலைமையகக்  கட்டிடத்தில்   தீ  பற்றிக்கொண்டது.

அக்கட்டிடத்தின்  பல  மாடிகளில்   தீ  பற்றிக்  கொண்டது.  தீயைக்  கட்டுப்படுத்த   தீ  அணைப்பு,  மீட்புத்  துறையினர்   கடுமையாக  போராடுகிறார்கள்.

தீ  விபத்துக்  காரணமாக    அவ்வட்டாரத்தில்   கடுமையான   போக்குவரத்து   நெரிசல்   ஏற்பட்டுள்ளது.

காலை  மணி   11.50  வாக்கில்  பரவத்   தொடங்கிய   நெருப்பு    அந்த  ஆறு-மாடிக்  கட்டிடத்தின்   40 %  பகுதியைச்   சூழ்ந்து  கொண்டதாக  ஒரு  பேச்சாளர்   தெரிவித்ததாக   ஸ்டார்  ஆன்லைன்  கூறிற்று.

உயிருடற்   சேதம்   எதுவும்  இதுவரை    அறிவிக்கப்படவில்லை.