இபிஎப்: சந்தாதாரர்கள் சேமிப்புகள், தரவுகள் பாதுகாப்பாக உள்ளன

இன்று  காலை  சிலாங்கூர்   ஊழியர்   சேமநிதி (இபிஎப்) வாரிய   தலைமையகக்  கட்டிடத்தில்   மூண்ட  தீயில்   சந்தாதாரர்களின்  சேமிப்புகள்,  தரவுகள்   பாதிக்கப்படவில்லை   அனைத்தும்   பாதுகாப்பாக   இருக்கிறது.

இதனைத்   தெரிவித்த   இபிஎப்  கார்ப்பரேட்  தொடர்புத்  துறை   அந்த  பெட்டாலிங்   ஜெயா  அலுவலகம்   மறு  அறிவிப்பு   வரை  மூடப்படுவதாக  தெரிவித்தது.

“வாடிக்கையாளர்கள்,  பணியாளர்களின்   பாதுகாப்பு  முக்கியம்    என்பதால்  கட்டிடம்  முழுமையாகக்  காலி     செய்யப்படுகிறது.  அலுவலகமும்  முகப்புச்  சேவைகளும்   அடுத்த   அறிவிப்புவரை  மூடப்பட்டிருக்கும்.

“சந்தாதாரர்களின்   தரவுகளும்   சேமிப்புகளும்   பத்திரமாக   இருக்கின்றன  என்பதை    உறுப்பினர்களுக்குத்   தெரிவித்துக்  கொள்கிறோம்”.

சந்தாதாரர்கள்  அவர்களின்  தேவைகளுக்கு   அருகில்  உள்ள  இபிஎப்  கிளை  அலுவலகத்தை    அணுகலாம்   என்றும்    அது  கூறிற்று.

03-8922 6000   என்ற    எண்ணுடன்  அல்லது  http://enquiry.kwsp.gov.my   என்ற  இணைய  முகவரியுடனும்   அவர்கள்   தொடர்பு   கொள்ளலாம்.