ஆயர் ஈத்தாம் வேட்பாளர் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை- அமனா

ஜோகூர்,  ஆயர்  ஈத்தாமில்  அமனா    கட்சி   வேட்பாளர்   டிஏபி  சின்னத்தில் போட்டியிடுவது     என்று  இறுதி  முடிவு   செய்யப்பட்டிருப்பதாகக்    கூறப்படுவதை   அமனா  மறுத்துள்ளது.

“இல்லை,  இல்லை,  அப்படி  எதுவும்   முடிவு   செய்யப்படவில்லை”,  என  அமனா   தலைவர்  முகம்மட்  சாபு   கூறினார்.

“இன்னும்  விவாதித்துக்  கொண்டுதான்   இருக்கிறோம்”,   என்றார்.

டிஏபிக்கு   ஒதுக்கப்பட்ட   ஆயர்  ஈத்தாம்   தொகுதியில்    அமனா   வேட்பாளர்  போட்டியிடலாம்   என்றும்   ஆனால்,  அவர்  டிஏபி  கட்சிச்  சின்னத்தில்  களமிறக்கப்படுவார்  என்றும்  கடந்த  மாதத்திலிருந்து    ஆருடங்கள்   கூறப்பட்டு   வந்துள்ளன.

அமனா  தலைவர்கள்   அது   குறித்துக்  கருத்துரைக்க   மறுத்தனர்.