‘செக்ஸ் காணொளியில் இருப்பது நானல்ல’- சொங் வே மறுப்பு

மலேசிய  பூப்பந்து  வீரர்   லீ   சொங்   வே,  சமூக  வலைத்தளங்களில்   வைரலாகிக்  கொண்டிருக்கும்   செக்ஸ்   காணொளியில்  இருப்பது   தான்  அல்ல  என்று  மறுத்துள்ளார்.

சின்  சியு  டெய்லியிடம்   பேசிய   சொங்  வே  அது  வேறு  யாரோ    என்றார்.

“அவர்  என்னைப்போல்  தோற்றம்  கொண்டவர்கூட  அல்ல.

“ஏன்  இப்படி?  சிலருக்கு  வேறு   வேலை   எதுவும்  இல்லை  போலும்”,  என்றவர்  சொன்னார்.

பலர்   அக்காணொளியைத்   தமக்கு   அனுப்பி  வைத்திருப்பதாகவும்    அவர்  கூறினார்.

“உங்களுக்கு  வேண்டுமா  அனுப்பி  வைக்கிறேன்”,  என்றார்.

காணொளி  குறித்து  போலீசில்   புகார்   செய்யப்போவதில்லை  என்று  சின்  சியு-விடம்  கூறிய   சொங்  வே,    த  மலேசியன்   இன்சைட்டிடம்  பேசியபோது  காணொளியைப்  பரவ  விட்டவர்   யார்  என்பதைக்  கண்டுபிடிக்க   போலீஸ்  புகார்   செய்யப்போவதாகக்  கூறினார்.