ரோஸ்மாவைப் பற்றி மகாதிர் அவதூறாக பேசக்கூடாது

 

டாக்டர் மகாதிர் போன்றோர் ரோஸ்மா மான்சோர் மீது அவதூறு கூறுவது வருத்தத்திற்குரியதாகும் என்று பிரதமர் நஜிப்பின் துணைவி ரோஸ்மா மன்சோரின் சிறப்பு அதிகாரி கூறுகிறார்.

மகாதிர் போன்ற ஒருவர் எப்படி வதந்தியை செவிமடுத்து, அதை நம்புவது? அவர் குற்றம்சாட்டுவதற்கு முன்னர் அது சம்பந்தட்ட உண்மையை ஆய்ந்து தெரிந்துகொண்டிருக்க வேண்டும் என்றாரவர்.

சட்டத்திற்கும் பண்பாட்டிற்கும் மேலாக அரசியல் இலாபத்திற்கு முன்னிலை கொடுக்கக்கூடாது என்று அந்த சிறப்பு அதிகாரி விடுத்திருந்த அறிக்கை இன்று அம்னோ ஓன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரோஸ்மா மன்சோர் ஒரு தனியார் ஜெட் விமானத்தில் அவரது கணவர் உடனில்லாமல் ஏறும் ஒரு வீடியோ பதிவில் மகாதிர் பேசியிருந்ததை அந்த சிறப்பு அதிகாரி குறிப்பிட்டார்.