ரோன்95, 10 சென் குறைகிறது

இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் முறையே 10 சென், 11 சென் மற்றும் 12 சென் குறைகிறது.

அடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.23 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரிம 2.19 ஆகவும் விற்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இறக்கம், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, நாளை இரவு வீடு திரும்பவுள்ள மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.