நஜிப்: 14வது ஜிஇயை எப்போது வைத்துக்கொள்ளலாம்?நீங்களே சொல்லுங்கள்

இன்று  கோலாலும்பூரில்   மசீசவின்  சீனப்  புத்தாண்டு  உபசரிப்பில்   கலந்துகொண்ட  பிரதமர்   நஜிப்    அப்துல்  ரசாக்கிடம்  பொதுத்   தேர்தல்   எப்போது   என்று    வினவப்பட்டதற்கு  “எப்போது   வைத்துக்கொள்ளலாம்?”,  என்று  கேள்வி  கேட்டவர்களிடமே    திருப்பிக்  கேட்டார்.

தேதியை   முடிவு   செய்து  விட்டீர்களா   என்று   விடாமல்   கேட்கப்பட்டதற்கு  “எப்போது    வைத்துக்கொள்ளலாம்   என்று  நீங்களே  சொல்லுங்கள்”,  என்றார்.

14வது   பொதுத்   தேர்தலுக்கு     வழிவகுக்கும்  வகையில்      சீனப்புத்தாண்டுக்குப்  பிறகு  நஜிப்  நாடாளுமன்றத்தைக்  கலைப்பார்  என்று   ஆருடங்கள்   கூறப்பட்டுள்ளன.

ஆனால்,  மக்களவச்  செயலாளர்   ரூஸ்மே   ஹம்சாவின்  கடிதம்  ஒன்று   2018-க்கான   நாடாளுமன்றத்தின்  முதல்   கூட்டத்தை  மார்ச்   5-இலிருந்து  ஏப்ரல் 5வரை     நடத்தத்   திட்டமிடப்பட்டிருப்பதாகக்  கூறுகிறது.

நஜிப்  இதற்குமுன்   ஒரு  முறை  ஆகஸ்ட்  மாதத்தில்   நோன்புப்  பெருநாளுக்கு   முன்னதாக   பொதுத்   தேர்தல்   நடத்தப்படும்   கூறியிருப்பதும்  கவனிக்கத்தக்கது.

இப்போதைய  பிஎன்  அரசாங்கத்தின்   தவணைக்காலம்  ஜூன்  24-இல்  முடிவுக்கு   வருகிறது. அதன்பின்னர்  ஆக்ஸ்ட்  மாதத்துக்குள்   பொதுத்   தேர்தலை   நடத்தியாக   வேண்டும்.