பெர்மாத்தா புரவலர் பதவியைத் துறக்க மாட்டேன்: ரோஸ்மா திட்டவட்டம்

பிரதமரின்   துணைவியார்    ரோஸ்மா   மன்சூர்,   எதிரணியினர்  என்னதான்   அழுத்தம்  கொடுத்தாலும்  பெர்மாத்தாவின்  புரவலர்  பதவியிலிருந்து   விலகப்போவதில்லை  என்ற  முடிவில்   உறுதியாக  இருக்கிறார்.

இதுவரை  தாம்   பட்ட  பாடும்  முயற்சிகளும்   நாட்டுக்காகவும்   குழந்தைகளுக்காகவும்தானே  தவிர   அதில்   தன்னலம்  துளியும்   இல்லை    என்றார்.

கடந்த  10ஆண்டுக்  காலத்தில்   பெர்மாத்தா   பல   தொல்லைகளையும்   சவால்களையும்   எதிர்நோக்கி   வந்திருப்பதாகவும்   அதன்  புரவலரான  தமக்கெதிராக    எதிர்க்கட்சிகள்   அவதூறுகளையும்   குற்றச்சாட்டுகளையும்   கூறி  வந்துள்ளன   என்றும்   அவர்  சொன்னார்.

“பெர்மாத்தாவுக்கான   நிதி  ஒதுக்கீட்டை    அதிகரிக்க    நான்   அரசாங்கத்துக்கு  நெருக்குதல்   கொடுத்ததுபோலவும்   பெர்மாத்தா   நிதியை  சொந்த  நன்மைக்குப்  பயன்படுத்திக்  கொண்டது  போலவும்   குற்றச்சாட்டுகளை  வாரி  இறைத்தார்கள்.

“யார்  என்ன  சொன்னாலும்  சொல்லிக்  கொள்ளட்டும்.  எதிரணியினரின்    குற்றச்சாட்டுகள்    கேட்பதற்கு     வேம்பாகக்   கசந்தாலும்  மலேசியக்  குழந்தைகளுக்காக    அவற்றை  ஒதுக்கித் தள்ளுகிறேன்.  நல்லது   செய்வோருக்கு  இறைவன்  பக்கபலமாக   இருப்பான்  என்ற  நம்பிக்கை   எனக்குண்டு”,  என்றவர்  இன்று  லங்காவியில்,  லங்காவி   தேசிய  பெர்மாத்தா  குழந்தைகள்   மையத்தைத்    தொடக்கி  வைத்தபோது  கூறினார்.