திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்கள்.. கண்டுபிடிக்க ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் காணாமல் போன 100 குளங்களை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவில் உலகப்புகழ்பெற்றது. இந்த கோவிலுக்க வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

மலையடிவாரத்தில் உள்ள இந்த கோவிலுக்கு 14 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிரிவலப் பாதை உள்ளது. இந்த கிரிவலப் பாதை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த கிரிவலப் பாதையில் இருந்த 360 குளங்களில் 100 குளங்கள் மாயமாகியுள்ளதாக என்ஜிஓ அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மாயமான குளங்களை கண்டுபிடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாயமான குளங்களை கண்டுபிடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: